தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் அதிகரிப்பு அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2018

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் அதிகரிப்பு அரசாணை வெளியீடு

பல வருடங்களுக்கு முன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள்-மாணவிகள் சேருவதை விட என்ஜினீயரிங் கல்லூரிகளில் அதிகம் சேர்ந்தார்கள்.

அதற்கு காரணம் வேலைவாய்ப்பு பெரிதும் காணப்பட்டது. என்ஜினீயரிங் படித்தாலே வேலை. மேலும் கை நிறைய சம்பளம் என்ற நிலை இருந்தது.

அந்த நிலை படிப்படியாக குறைந்தது. அதன் காரணமாக கடந்த சில வருடங்களாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்த வருடம் வழக்கம் போல பி.காம். படிப்பில் சேர கடும்போட்டி நிலவியது.

கடந்த 18-ந்தேதி பெரும்பாலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகள் பல ஆன்லைனில் மாணவர் சேர்க்கையை முடித்தன. கல்லூரிகளின் வாசலில் மாணவர்களுடன் பெற்றோர்களும் காத்துக் கிடந்தனர். கல்லூரிகளில் மகள் அல்லது மகனுக்கு இடம் கிடைப்பது அரிதாக இருந்தது. இடம் கிடைத்துவிட்டால் ஏதோ பணப்புதையல் கிடைத்தது என்று நினைக்கும் நிலையும் உருவானது.
இதையடுத்து மாணவர்கள், பெற்றோர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையொட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை அதிகரித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலிவால் உத்தரவிட்டார்.
இது அரசாணையாகவும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அரசாணை நடப்பு கல்வி ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி