ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு!- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2018

ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு!- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!


பயோமெட்ரிக் வருகை பதிவு இன்னும் ஒரு வாரக் காலத்தில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இன்று (ஜூலை 29) நடைபெற்ற கொங்கு வேளாளர் இளைஞர் சங்கத்தின் வாசக சாலை திறப்பு விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் பங்கேற்றனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் வகையில் கூடுதலாக ஒரு ஆங்கில வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்படும். மாநிலத்தில் 32 மாவட்டங்களிலும் உள்ள நூலகங்களிலும் ஐ.ஏ.எஸ். அகாடமிகள் தொடங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக இந்த ஆண்டு 25 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டயக் கணக்கு சிறப்புபயிற்சி அளிக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் மூவாயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, 9, 10, 12ஆம் வகுப்புகள் அனைத்தும் கணினி மையமாக்கப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.

7 comments:

  1. 1114 பணியிடங்களில் நிராகரிக்கபட்டவர்கள் பலர் தவறான வழியில் பணியில்சேர்ந்துள்ளனர் விரைவில் களையெடுக்கபடும்.....

    ReplyDelete
  2. tet 2nd paper certificate download pannadhavarku maruvaaipu unda?

    ReplyDelete
  3. 1114 is completed
    Eligible in 194candidate only
    Appointment order issued in 28.11.2017

    ReplyDelete
  4. Ayya antha 15 days posting n ngaya aachuu???

    ReplyDelete
  5. இந்த அமைச்சர் பேட்டிகளை எல்லாம் தொகுத்து ஒரு டாகுமென்ட்ரி படம் தயாரிக்கலாம்.முதலில் 13000,பிறகு6000,பிறகு4000,பிறகு1114,பிறகு1942,பிறகு745.முறையான திட்டங்கள் இல்லாமல் படித்த பட்டதாரிகளை ஏங்க வைத்து ஏமாற்றியது மிக மோசமான நடவடிக்கை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி