TET - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2018

TET - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை!

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர். 

தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகத்தின்தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகத்தின் மாநில பொது குழு கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. மாநில தலைவர் ஜோஸ் டைட்டஸ் தலைமை வகித்தார். கழக நிறுவனர் திருமாவளவன் பேசினார். கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் இருந்து வரும் பங்களிப்பு புதிய ஓய்வூதிய முறையை கைவிட்டு, பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும். 38 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் கழகத்தின் செயல்முறைக்கு அரசு ஏற்பு அளிக்க வேண்டும். 


2013ம் ஆண்டுக்கு முன் பணி நியமனம் பெற்ற அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை,  பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். 

மருத்துவக்கல்வி சேர்க்கைக்கான நீட் தேர்வு, ஆண்டுக்கு இருமுறை என்பதை கைவிட்டு ஒரே முறை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நிர்வாகிகள் மனோகரன், மரியதாசன், நற்குணம், செல்வராசு, சுப்பிரமணியன், ராஜசேகரன், சின்னப்பா, குமார், குணசேகரன், எழில்வாணன், அனுசுயா, பிரைட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

11 comments:

  1. Enaku oru doubt Tet 2 testum pass panunatha aided school Ku join pana mudiuama illa eligibility test mattum pothuma aided school Ku please any one answer me my question clarify my doubts plzzzz frds

    ReplyDelete
  2. I have one doubt....naan tet exam pass in paper 1 & paper 2.so naan tet exam this year content panna elluthalama or vendamaa...please any body say....

    ReplyDelete
    Replies
    1. Thevai illai. Ini neengal niyamana thervukku thayaaragungal.

      Delete
  3. Sir,ungal thiramaiyai railway,postel,bank exam pakkam thiruppungal.palan kidaikkum.

    ReplyDelete
  4. Tettukku padikkiren endru ungal vayathaiyum,vaalibathaiyum illakka vendam.

    ReplyDelete
  5. Aided schl ku inum G.o varala nu soldranga .epo varum.any idea

    ReplyDelete
  6. Aided schl ku inum G.o varala nu soldranga .epo varum.any idea

    ReplyDelete
  7. Any information about competitive exam syllabus

    ReplyDelete
  8. Any information about competitive exam syllabus

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி