Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

BE - இன்ஜி., கவுன்சிலிங் இறுதி சுற்று விருப்ப பதிவு நாளை நிறைவு!

அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங், இந்த ஆண்டு ஆன்லைன் வழி கவுன்சிலிங்காக அறிமுகம் செய்யப்பட்டது.
மொத்தம், 509 கல்லுாரிகளில், 1.72 லட்சம் இடங்களுக்கு, 1.04 லட்சம் மாணவர்களுக்கு அனுமதி தரப்பட்டது. ஐந்து சுற்றுகளாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில், நான்கு சுற்றுகள் முடிந்துள்ளன. இவற்றில், 51 ஆயிரத்து, 990 இடங்கள் நிரம்பியுள்ளன.ஐந்தாம் சுற்றுக்கான விருப்ப பதிவு, நேற்று முன்தினம் துவங்கியது. நாளை மாலை, 5:00 மணியுடன் விருப்ப பதிவு முடிகிறது. நாளை இரவு, தோராயமான இடங்கள் ஒதுக்கப்படும். அவற்றுக்கு, வரும், 19ம் தேதிமாலை, 5:00 மணிக்குள் மாணவர்கள் ஒப்புதல் தர வேண்டும்.

இதையடுத்து, 20ம் தேதியுடன் பொது பாடப்பிரிவு கவுன்சிலிங்கில் இட ஒதுக்கீடு முடிகிறது.இதற்கிடையில், பிளஸ் 2 துணை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான, இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங்குக்கு, இன்று விருப்ப பதிவு துவங்குகிறது. வரும், 20ம் தேதி ஆன்லைனில் பதிவு செய்யலாம் என, அண்ணா பல்கலையின் இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives