அரசுப் பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு , ஆசிரியரை அதிரவைத்த அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2018

அரசுப் பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு , ஆசிரியரை அதிரவைத்த அமைச்சர் செங்கோட்டையன்



கும்பகோணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு செய்தார். அமைச்சரின் திடீர் ஆய்வு பள்ளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ பவுன்ராஜ் மகன் திருமணம் திருக்கடையூரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன்  கும்பகோணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அன்னை அஞ்சுகம்  நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்ற அமைச்சர் செங்கோட்டையன் நேராகத் தலைமை ஆசிரியர் வகுப்பறைக்குச் சென்றதோடு  அங்குள்ள ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது தலைமை ஆசிரியரிடம் விடுமுறை எடுத்துள்ள ஆசிரியர்கள் குறித்தும், எத்தனை நாள்களாக, எதற்காக விடுமுறையில் இருக்கிறார்கள் என்பது குறித்தும் கேட்டார்.

இதன் பின்னர், ஒவ்வொரு வகுப்பறையாகச் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஒரு வகுப்பறையில் சேதம் அடைந்த நிலையில் இருந்த ஒரு தையல் மிஷினைப் பார்த்து அங்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியரிடம் எதற்காக இந்த வகுப்பறையில் தையல் மிஷின் இருக்கிறது என்று கேட்டார். ஆனால், அதற்கு அந்த ஆசிரியர் பதில் எதுவும் கூறாமல் இருந்தார். உடனே அந்த ஆசிரியரைப் பார்த்து கல்வித்துறை அமைச்சர் கேள்வி கேட்கிறேன். பதில் கூறாமல் ஆசிரியர் ஆகிய நீங்கள் நிற்கிறீர்கள் உங்களுக்கு மாத சம்பளம் எவ்வளவு என்று கேட்டார். உடனே அந்த ஆசிரியர் நான் பயிற்சி ஆசிரியர் அதனால் எனக்கு எந்த விவரமும் தெரியாது என்று கூறினார்.

 உடனே மாணவர்களைப் பார்த்து உங்களுக்குத் தையல்மிஷின் பயிற்சி தரப்படுகிறதா என்று கேட்டார். அதற்கு அந்த மாணவர்கள் `நோ சார்’ என்று கூறினர். அங்கு நின்ற கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் பாப்பம்மாளிடம், ``ஏன் இங்கு தையல் மிஷின் உள்ளது” என்று கேட்டார். இதற்கு அவர் தையல்மிஷின் இருக்கும் அறையில் தேர்வு நடந்தது. அதனால், தையல் மிஷின் இங்கு வைக்கப்பட்டது என்று கூறினார்.

இதையடுத்து அடுத்த வகுப்பறைக்குச் சென்று மாணவர்களின் வருகை குறித்து கேட்டார். அதற்கு அந்த வகுப்பறையில் இருந்த ஆசிரியர் குறைவான மாணவர்களே வந்துள்ளனர் எனக் கூற ஏன் மாணவர்கள் வருகை இவ்வளவு குறைவாக உள்ளது. வசதிகள் குறைபாடு ஏதும் உள்ளதா எனக் கேட்டார். அதற்கு அந்த ஆசிரியர் வசதிகள் எல்லாம் உள்ளன. மாணவர்கள் விளையாட்டுப் போட்டிக்குச் சென்று விட்டனர் என்று கூறினார். உரிய அனுமதி பெற்ற பின்னர்தானே சென்றார்கள் என்றும் தெரிந்துகொண்டார்.  

20 comments:

  1. avra book koduthu padika soonigila.....enime vantha padikka sllunga

    ReplyDelete
  2. atchi mudiyum nerathil kalvi kan theranthu vitatham. sutrilum kollai kara kumbal kuttam veraa.. nambatheerkal...

    ReplyDelete
  3. Dai sengottaya un alambal thanga mudiyala ithukku oru vidivu vanthurum one week la

    ReplyDelete
  4. ethanai kaalamthan emartuvar entha natilaa.. tamil natilaa..

    ReplyDelete
  5. வாழ்த்துகள் வரவேற்க்க ஒன்று இதேப்போல் மலை பள்ளிகளையும் திடீர் ஆய்வு செய்ய வேண்டும்

    ReplyDelete
  6. இடைநிலை ஆசிரியர் போட்டி தேர்வு ரத்து செய்தியின் பின்னணி என்ன...??

    ReplyDelete
    Replies
    1. நேரடி பணி நியமனம் வாய்ப்பு உள்ளதா?

      Delete
    2. Paper 1 kku pottiexam illaya?

      Delete
  7. Tet 2017 exam cancel pannitangala

    ReplyDelete
  8. Why 2017 cancel? Yematriyavanai kandupidinga TET+seniority, athavituttu2013 best 2017wrost-nu sona....sariella

    ReplyDelete
  9. Nice ithepol adikkadikku aievu seiyanum kuraikalai kettu sari seiyanum appo thaan unmaiyana minister

    ReplyDelete
  10. Nice ithepol adikkadikku aievu seiyanum kuraikalai kettu sari seiyanum appo thaan unmaiyana minister

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி