Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

போலி சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்த உதவி பேராசிரியர் கைது!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் போலி சான்றிதழ் கொடுத்து,பணியில் சேர்ந்த உதவி பேராசிரியரை போலீசார் கைதுசெய்தனர்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மகாலிங்கம், பொன்னேரியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் , முனைவர் பட்டம் பெற்றதாக போலி சான்றிதழ் சமர்பித்து, கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியில் சேர்ந்ததாக எழுந்த புகாரில் இவர் , பீஹார் மாநிலத்தில் உள்ள மகத் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சான்றிதழ் சமர்ப்பித்து, உதவி பேராசிரியர் பணியை பெற்றார்.

மேற்கண்ட முனைவர் பட்டம் பெற்றது தொடர்பாக, கல்லுாரி இயக்ககம் ஆய்வு மேற்கொண்டு, பல்கலைக் கழகத்திடம் விளக்கம் பெற்றது. அதில், மகாலிங்கம் சமர்ப்பித்த முனைவர் பட்டம் சான்றிதழ் போலியானது என்பது தெரிந்தது. பொன்னேரி போலீசார் மகாலிங்கத்தை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.ஏற்கனவே கடந்த ஆறுமாதத்திற்கு முன்னர் இக்கல்லூரியில் தமிழ் இளங்கலை பிரிவில்.பார்த்திபன் பேராசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

மாணவர்களின் கல்வி தரம்பாதிக்காமல் தடுக்க அனைத்து அரசு கல்லூரிகளிலும் பேராசிரியர் மற்றும் ஆசிரியர்களின் சான்றிதழை முறைப்படி அரசு ஆய்வு செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

9 comments

 1. இவரை போன்றே சிலர் அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றி வருகின்றனர்.இதனை அரசு கண்காணித்து அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கு எழுத்து தேர்வு மூலம் நியமனம் செய்ய வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. exam a)objective tybe preliminary and b)describtive tybe main exam c)class demo and oral questions live interview ena 3 katangalil vaithal miga thiramaiyana asst professors colleges ku kidaipanganu naan govt ku korikai vaikiren..

   Delete
  2. ithula 3 m kata live demo class oral interview marks interview mudincha udaneya candidatesku mobile ku sms mulam theriyapaduthavendum..notice board la votavum vendum..objective omr sheet oda marks matrum describtive mark paperoda trb web la trb elacandidateskum theriramathri upload seyavendum..

   Delete
  3. ipadipaninal poli teachers a 100% olikamudium..higher education quality um irukum..

   Delete
 2. அரசு கல்லூரி மற்றும் பள்ளிகளில் நிரந்தர வேலை செய்யும் அனைத்து ஊழியர்களின் பெயர் கல்வி தகுதி சம்பள விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாக வெளியட வேண்டும், அவர்களும் கல்லூரி பள்ளி சான்றிதழ்கள் அனைத்தும் upload செய்யப்பட வேண்டும்,

  ReplyDelete
 3. உதவிபெறும் கல்லூரிகளில் சுமார் 20% போலி ph.D யில் பணியில் சேர்ந்துள்ளனர்

  ReplyDelete
 4. nan oru college la asst professor a iruken..my qualification msc mphil Bed Set csir..enkuda 4 phd work pantranga..nan nadathurathukum avungalukum niraya vithiyasam iruku..neenga nadathurathu avangalavida udane mind la reach aguthunu students solranga..so ithula irunthu en Set csir+8 years a vida avungaloda verum phd degree central govt new regulation padi epadi uyarva irukamudium..? High weitagela irukamudium..? so students ku lesson nadatha theriyatha verum phd holders ku epadi weightage kodukalam..?so oruvela ivangalum ipadi copy adichu phd vaangutu vanthavanganu enaku doubt iruku fnds..

  ReplyDelete
 5. To be a very good teacher two things are enough:
  1. Indepth knowledge in their respective subjects.
  2. Effective classroom management
  The recruiting authority may consider and may change the process in the recruitment mechanism.

  1. Conduct a common exam in the subject concerned.
  2. Make an attempt to get the appraisal report from the classroom demonstration. (But, the venue for handling the classes should not be informed earlier.., but reachable to all by all means) . No Ph.D will work. Only knowledge works

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives