அக்டோபர் 4 ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு என்பது எதற்காக - ஜேக்டோ ஜியோ விளக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2018

அக்டோபர் 4 ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு என்பது எதற்காக - ஜேக்டோ ஜியோ விளக்கம்!


ஆசிரிய பேரினமே அக்டோபர் 4 ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு என்பது எதற்காக என கேட்பவர்களுக்காக ஜேக்டோ ஜியோ ஒன்றிணைந்த நிலையில் மிகப்பெரிய போராட்டம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அனைத்தையும் முறியடித்ததன் மூலமாகத்தான் தமிழகத்தில் ஊதியமாற்றம் கிடைக்கப் பெற்றோம். ஆனால் 21 மாத ஊதிய நிலுவைகளைப் பெற்றோமா???? நம்மோடு இணைந்து போராட்டத்தில் கலந்து கொண்டு மிகப்பெரிய இழப்பினை சந்தித்துக் கொண்டு இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கிணையான ஊதியம் பெற்று விட்டோமா? 2003 க்குப்பின் பணியில் சேர்ந்த அனைவரையும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்துவிட்டோமா? நம்மோடு இணைந்து போராடிய சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள்,  தொகுப்பூதிய மதிப்பூதிய ஊழியர்கள், பகுதி நேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் பெற்று விட்டோமா? ஆட்குறைப்பு நடவடிக்கையை இப்போது தடுக்காவிட்டால் நாளை நமது சந்ததியினர் வேலை வாய்ப்பு கிடைக்காமல் போகும் அந்த அரசாணையைத் தடுக்க வேண்டாமா? நீங்கள் நினைக்கலாம் ஒரு நாள் தற்செயல் விடுப்பால் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்று? பல இலட்சக்கணக்கான ஆசிரியர்களும் அரசூழியர்களும் களத்தில் நின்று தற்செயல் விடுப்பு எடுக்கும் போது அரசு செயல்பாடுகள் ஸ்தம்பிக்கும். இப்போதே யோசிக்க ஆரம்பித்து விட்டது அரசு, தற்செயல் விடுப்பு எடுத்தால் ஊதியம் இழப்பு என்று? தற்செயல் விடுப்பு என்பது நமது உரிமை. அதை தடுக்க முடியாது. கடந்தகால வரலாறு 5 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோதே முழு ஊதியம் பெற்ற வரலாறு. எனவே தோழர்களே கடமையே கண்ணாக திகழும் ஆசிரியர் அரசூழியர்களே அக்டோபர் 4 ஆம் நாள் தற்செயல் விடுப்பு எடுப்பதால் ஒன்றும் இழப்பு ஏற்படாது, எனவே அனைவரும் தற்செயல் விடுப்பு எடுத்து நம் கோரிக்கையை வென்றெடுப்போம்.

தோழமையுடன்,

மாநில,மாவட்ட,வட்டார TNPTF
 பொறுப்பாளர்கள் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, வந்தவாசி வட்டாரக் கிளை

2 comments:

  1. ஆம் சரியான முடிவு. அனைத்து ஆசிரியர்கள் ஒன்று திறன்று வர வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களும் சேர்ந்து போராட வேண்டும். காரணம் ஆசிரியர்களுக்கள் பிரிவுகள் இல்லாமல் சேர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம்.

    ReplyDelete
  2. கண்டிப்பாக பகுதி நேர ஆசிரியர்களும் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி