ஆதார் எண் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2018

ஆதார் எண் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!


அரசின் முக்கிய நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் அவசியம் என மத்திய அரசு கூறியிருந்தது. மத்திய அரசின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த சில ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வருகிறது.முதலில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கைவிசாரித்து வந்தது. 'அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று தனிமனித சுதந்திரம்.

இதனை ஆதார் மீறுவதாக உள்ளது' என அந்த அமர்வு ஒரு பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.இதையடுத்து, தனிநபரின் விபரங்களை பகிர்வது அடிப்படை உரிமையை மீறும் செயலா? என்பது குறித்து விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.இந்த அமர்வு வழக்கை விசாரித்து முடித்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் செப்டம்பர் 26அன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.அதன் பேரில் இன்று ஆதார் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

2 comments:

  1. கோர்ட்டாவது கூந்தலாவதுன்னு ஒரு ஆல் சொல்லிட்டு போய்ட்டாரு, இன்னமுமா நாம கோர்ட்டு சொல்லுறத நம்பனும்,

    ReplyDelete
  2. இனி தனியார் நிறுவனங்கள் ஆதார் நகல் கொடு என்றால் அரசு நடவடிக்கை எடுக்குமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி