பாடத் திட்டத்தில் தேவரின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்கக் கோரிய வழக்கு : அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2018

பாடத் திட்டத்தில் தேவரின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்கக் கோரிய வழக்கு : அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு


தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் அரசிடம் உரிய விளக்கம் கேட்டு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சங்கிலி என்பவர் தொடர்ந்த வழக்கை ஒரு வாரத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கு விசாரணையின் போது தேவர் வாழ்க்கை வரலாறு 7ம் வகுப்பு பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது என்று அரசு தரப்பு வாதிட்டது குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் லேப்டாப் கொடுத்து சீமராஜா படத்தில் கூறுவதுபோல் படம் பார்க்க வைக்க இந்த அரசிற்கும் அரசியல் வியாதிகளுக்கும் கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கி வீணடிக்க முடிகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் என்ற நிலை என்ற கொள்கையைக் கூட வைக்க முடியவில்லை. ஏன் என்று யுகித்துக் கொள்ளுங்கள். ஆனால் அனைத்து வேலைகளையும் பள்ளிகளில் ஆன்லைன் என்று கூறி அதற்காக கணிப்பொறி இயக்குவதற்கும் ஆட்கள் நியமிக்கப்படவில்லை. அனைத்து மாணவர்களுக்கும் கணிப்பொறி பாடம் வைத்துவிட்டு பாடம் நடத்தவும் ஆட்கள் நியமிக்கப்படவில்லை. அமைச்சர் கூறுவது போல் பகுதிநேர (2 மணி நேர) ஆசிரியர்கள் பள்ளி நேரம் முழுமைக்கும் மட்டுமல்லாது வீட்டிலும் தலைமையாசிரியர்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் பணிபுரிந்து ஆன்லைனில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்கிறார்கள். இதற்காக கொடுக்கப்படும் சம்பளம் 7700. இந்த சம்பளத்தில் மக்களுக்காக பாடுபடும் (?) அரசியல் வியாதிகள் எத்தனை நாட்கள் சாப்பிடுவார்கள்? இந்த பகுதி நேரம் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தது யார்? மற்ற நேரங்களில் எங்கு வேலைக்கு செல்வார்கள்? ஏன் இப்படி அனைத்து துறைகளிலும் 7500 ஊதியம் என்று நியமிக்க ஆரம்பித்து விட்டீர்கள்? இப்படி பல்லாயிரக்கணக்கான (நர்ஸ் ..... உட்பட) பணியிடங்களில் நியமித்து விட்டு பல்லாயிரக்கணக்கானோர் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்துகிறீர்கள்? அரசே இப்படி கால்வயிற்றுக்கு கூட போதாத சம்பளத்தினை ஊதியமாக கொடுக்க இறங்கலாமா? மற்ற இடங்களிலெல்லாம் கோடி கோடி என்று ஒதுக்கிவிட்டு இவர்களுக்கு மட்டும் இவ்வளவு கேவலமான சம்பளத்தை நிர்ணயிக்க உங்களுக்கு எப்படிதான் மனசு வருகிறது? இவர்களையும், இவர்களது குடும்பத்தையும் அட்லீஸ்ட் ஒரு உயிராகவாவது நினைத்து அவர்களுக்கு குறைந்த பட்ச தேவைக்காகவாவது சம்பளத்தை நிர்ணயிங்கள். இப்படி 2 மணி நேரம் என்றும் வாரத்தில் 3 நாட்கள் என்றும் கேவலப்படுத்தாதீர்கள். மற்ற நேரங்களில் எங்கு சென்று பிச்சை எடுப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி