சத்துணவு ஊழியர்கள் பணி நிரவல் சம்பந்தமான சமூகநலத்துறை ஆணையரின் சுற்றறிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2018

சத்துணவு ஊழியர்கள் பணி நிரவல் சம்பந்தமான சமூகநலத்துறை ஆணையரின் சுற்றறிக்கை!



1 comment:

  1. முன் எப்போதும் இல்லாத வகையில் கல்வி அமைச்சர் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இக்காலம் தொடக்கக் கல்வித் துறைக்கு பெரும் சாபக்கேடான காலம் என்றே சொல்லலாம் ஏனெனில் இவர் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் தினம் ஒரு அறிவிப்பு என்று வருகிறதே தவிர அவை செயல்பாட்டுக்கு வருவதற்கு வருவதற்குள் அடுத்த அறிவிப்பு செயல்பாட்டிற்கு வந்துவிடுகிறது ஆகவே முன்னெப்போதும் இல்லாமல் பெரும் சாபக்கேடான நிலைமை தொடக்கப்பள்ளி தொடக்கக்கல்வித்துறையில் நிலவுகிறது 10 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகள் மூடப்படுகின்றன அமைச்சர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் அருகாமை பள்ளிகளோடு இணைக்கப்படுகின்றன அதாவது இலவசம் என்பதற்கு பதிலாக விலையில்லா என்ற சொல் அதிமுக ஆட்சியில் பயன்படுத்துவதைப் போல் மூடப்படுவது என்ற வார்த்தை இணைக்கப்படுகிறது என லாவகமாக பயன்படுத்தப்படுகிறது இதேபோன்றுதான் 25 மாணவர்களுக்கு குறைவான மாணவர்கள் கொண்ட சத்துணவு மையங்கள் வெறும் சமையலரோடு மட்டும் இயங்கும் என்று கூறி உதவியாளர் மற்றும் சத்துணவுஅமைப்பாளர் ஆகிய பணியிடங்கள் என 8000 மையங்களில் பணியாற்றும் சுமார் 16 ஆயிரம் பேர் வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர் அதுமட்டுமல்ல ஏழை மாணவர்களை இனங்கண்டு மாவட்டத்திற்கு 200 பேர் வீதம் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க இருப்பதாக ஓர் அறிவிப்பு நேற்று வந்துள்ளது ஏற்கனவே கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீதம் தனியார் பள்ளிகளில் சேர்க்கை என ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் இருந்து தனியார் பள்ளிக்கு செல்லும் நிலையில் அது போதாதென்று மாவட்டத்திற்கு 100 பேர் வீதம் தற்போது மேலும் சுமார் 3500 பேர் தனியார் பள்ளிக்கு அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மழலையர் வகுப்பு முறை கொண்டு வருவதாக அறிவித்துவிட்டு மழலையர் வகுப்பு முதல் மேல்நிலை கல்வி வரை ஒரே வளாகத்தில் இனைத்து நடத்துவதாக அறிவிப்பு வந்துள்ளது இதன்மூலம் மாநிலம் முழுக்க ஏறக்குறைய ஆயிரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்மற்றும் 2500 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் ஒழிக்கப்பட உள்ளன இது போதாதென்று தொடக்கக் கல்வித் பள்ளிக்கல்வித்துறை உடன் இணைத்துசெயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன செங்கோட்டையன் அவர்களின் தலைமையிலான இந்த காலகட்டம் கல்வித் துறையின் சாபக்கேடு மட்டுமல்லாமல் ஏழை எளிய மாணவர்களின் கனவான கல்வி என்பது எட்டாக்கனியாக எதிர்காலத்தில் மாறும் என்பதில் ஐயம் இல்லை பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற பழங்கால முறையை மிகவும் லாவகமாக அதேநேரத்தில் எதிர்ப்பு ஏற்படாவண்ணம் தினம் ஒரு அறிவிப்பு வெளியிட்டு கல்வியில் புரட்சி போன்ற மாயையை உருவாக்கி கற்கால்த்திற்குகொண்டு செல்லும் நிலையை இந்த அரசு கையாண்டுள்ளதை சமூகம் பார்த்துக் கொண்டு உள்ளது என்ன செய்வது கையறுநிலையில் ஆசிரியர்களும் சமூக ஆர்வலர்களும் உள்ளனர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி