TET தவிர்த்து அனைத்து தேர்வுகளும் இனி ஆன்லைன் வழியில் நடைபெறும் : ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2019

TET தவிர்த்து அனைத்து தேர்வுகளும் இனி ஆன்லைன் வழியில் நடைபெறும் : ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

ஆசிரியர் தகுதித் தேர்வு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு, உதவி தொடக்கக் கல்வி அதிகாரி தேர்வு(தற்போது வட்டார கல்வி அதிகாரி தேர்வு), சிறப்பாசிரியர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.

பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் தேர்வுமுறை தற்போது மாற்றப்பட்டுள்ள நிலையில், தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு புதிதாக போட்டித்தேர்வையும் தேர்வு வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அரசு பாலிடெக்னிக்தேர்விலும் அதற்கு முன்பு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்விலும் மதிப்பெண் குளறுபடி மற்றும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், எவ்வித புகாருக்கும் இடம் தராமல் தேர்வுகளை நடத்தவும், தாமதம் இன்றி தேர்வு முடிவுகளை வெளியிடவும் ஆன்லைன்வழி தேர்வுக்கு மாற ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்தது.

முன்பு ஒவ்வொரு தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள், காகித வழியில் பெறப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டது.இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள கணினி ஆசிரியர் தேர்வு முதல்முதலாக ஆன்லைன்வழியில் நடத்தப்பட உள்ளது. தற்போது இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

 இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகள் கூறியது:

கணினி ஆசிரியர் தேர்வைத்தொடர்ந்துஅனைத்து தேர்வுகளையும் ஆன்லைன்வழியில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இதற்கான பணிகள் இறுதி நிலையை எட்டியுள்ளன. எனினும் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதார்கள் விண்ணப்பிக்கும் தேர்வுகள் "ஓஎம்ஆர் ஷீட்" முறையிலேயே வழக்கம்போல் நடத்தப்படும்.காரணம் ‘டெட்’ எனப்படும் தகுதித்தேர்வுக்கு சாதாரணமாக 7 லட்சம் பேர் விண்ணப்பிப்பது வழக்கம். அதுபோன்ற நிலையில், இத்தேர்வை ஆன்லைன்வழியில் நடத்துவது சிரமமாக இருக்கும். பொதுவாக அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு, அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு, உதவி தொடக்கக் கல்வி அதிகாரி (தற்போது வட்டார கல்வி அலுவலர் தேர்வு), மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தேர்வு, முதுநிலை விரிவுரையாளர் தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கு குறைந்தஎண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களே விண்ணப்பிப்பார்கள்.எனவே, இருக்கின்ற சூழலைப் பார்த்து குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் தேர்வுகளை ஆன்லைன் வழியாகவும்,‘டெட்’ தேர்வு போன்ற அதிக விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளும் தேர்வுகளை வழக்கம்போல் ‘ஓஎம்ஆர் ஷீட்’ முறையிலும் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், ஆன்லைன் தேர்வு முறையால்தேர்வு முடிவுகளை வெகுவிரைவாக ஒருசில வாரங்களிலேயே வெளியிட முடியும் என்றனர்.

22 comments:

  1. verum peasulayea ipadiyea vadaya suduvathal padichavanga life nadutheruvilathan irukum nu elarukum therium inimea yaraium eamatha mudiyathu..padichavanga life malara orea vazhi intha electionla intha govt a veetuku anupuvathuthan..patakastangal ithodu pogatum..

    ReplyDelete
  2. verum peasulayea ipadiyea vadaya suduvathal padichavanga life nadutheruvilathan irukum nu elarukum therium inimea yaraium eamatha mudiyathu..padichavanga life malara orea vazhi intha electionla intha govt a veetuku anupuvathuthan..patakastangal ithodu pogatum..

    ReplyDelete
  3. TRB/TNPSC UG/PG CHEMISTRY CLASSES WILL START SHORTLY FOR FORTHCOMING NOTIFICATION. ( CHEMISTRY CANDIDATE ONLY )
    CANDIDATE ARE ADMITTED BASED ON SCREENING TEST. CLASSES ON EVERY SATURDAY AND SUNDAY ONLY. ORIGINAL STATE LEVEL MOCK TEST WILL BE CONDUCT FOR EVERY POST.REGISTER YOUR NAME,MOB NO,APP.NO TO 9884678645

    ReplyDelete
  4. Tet syllabus yarvathu sollunga pa please

    ReplyDelete
  5. யாரையும் பணியில் சேர்க்க போவதில்லை. G.o 56. நடக்காத கல்யானத்திற்கு மேளம் தேவையா???

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீர்கள். முடிந்த தேர்வுகளுக்கு பதில் இல்லை.இதில வீறாப்பு வெற்ற

      Delete
  6. Ethula eluthunalum posting poda matinga . Appurram ethukku indtha nadagam

    ReplyDelete
  7. Sir am Kirubagaran BA English 43% I can't apply sir what did I want to do sir please reply me

    ReplyDelete
  8. Sir am Kirubagaran BA English 43% I can't apply sir what did I want to do sir please reply me

    ReplyDelete
    Replies
    1. Ask in the university for boosting your percentage in any of the subject ...and try to apply

      Delete
  9. I'm bsc bed then msc I can't apply for the computer instructor grade 1 post what is the solution

    ReplyDelete
  10. I'm bsc bed then msc I can't apply for the computer instructor grade 1 post what is the solution

    ReplyDelete
  11. சிறப்பாசிரியர் வழக்கு முடிந்ததா? 2012 வரை CPEd/DPEd பணியில் அமர்த்திய தேர்வு வாரியம் அதன்பின் 2017 ல் 6 வருடம் பின் தேர்வு வைய்த்து வயது 40 ஐ கடந்தவர்களின் நிலை?

    ReplyDelete
  12. Sir I passed 2 time in Tet but now I can't apply for tet English sc 41percentage in ug pls tell me what I do

    ReplyDelete
  13. Sir I passed 2 time in Tet but now I can't apply for tet English sc 41percentage in ug pls tell me what I do

    ReplyDelete
  14. மதிப்பிற்குரிய மாணவர்களே /ஆசிரியர்களே /பொதுமக்களே ! இத படிக்காம போகாதீங்க ப்ளீஸ் !!!

    பள்ளிக்கூட ஆசிரியர்களான நாங்க எங்களோட கஷ்டத்த ஷேர் பண்ணுறோம் !!!😢😢😢

    நண்பர்களே ! நாங்க சுமார் 4500 பேர்க்கு மேல மதுரை காமராஜ் பல்கலைக்கழத்துல 2001 -2016 வரைக்கும் M.Sc(CS and IT) படித்தோம் ,சுமார் 2000 பேர்க்கு மேல B.Ed முடிச்சிருக்கோம்.இப்ப நாங்க TRB Computer Instructor Grade-I க்கு Apply கூட பண்ணமுடியால.MCA/M.SC(CS)/M.SC(IT) மட்டும் Apply பண்ணலாம்.நாங்க எல்லாரும் இப்ப பள்ளிக்கூடம்/கல்லூரி வேலை பார்த்துட்டு இருக்கோம்.நாங்க படுச்சது M.Sc(CS) Syllabus தான் பெயர் மட்டும் M.Sc(CS and IT) .

    இத ஏன் MKU நடத்தணும்?Board Of studies என்ன பண்ணுச்சு ?Acadamic Council என்ன பண்ணுச்சு ? இதுக்கெல்லாம் ஒரு பதிலும் இல்ல .M.Sc(CS and IT) கொண்டு வந்தவுங்க படுச்சவுங்களா? பணத்த கொடுத்து வேலைக்கு வந்த பேராசிரியர் எப்படி இருப்பாங்கன்னு நினைக்க தோணுது.பேராசியர்களே இப்படி பண்ற போது மத்தவுங்ககிட்ட நல்லத எப்படிஎதிர்பார்க்கமுடியும்?

    நாங்க என்ன பண்ணுறதுன்னு தெரியல.குடும்பத்த விட்டுட்டு கோர்ட்டு கேசுன்னு அலைய முடியல ,பொருளாதார வசதியும் இல்ல,எங்களுக்கு மனஉளைச்சல் தான். கல்லூரி-யூனிவர்சிட்டியா கேட்கசொல்லுது, யூனிவர்சிட்டிஅரச கேட்கசொல்லுது M.Sc(CS and IT) கொண்டு வருவத ஓரே ஒரு நல்ல ஆசிரியர் நினைத்திருந்தால் தடுத்து இருக்கலாம்.ஒரு தவறு இப்ப எங்களோட வாழ்க்கைய பாதிக்குது.அதுவும் கல்விக்கு பெயர்போன காமராசர் பெயர வச்சிருக்குற MKU இப்படி பண்ணிருக்குறதுதான் கொடுமையிலும் கொடுமை.

    இத படிக்குறவுங்க மற்ற Group க்கு ஷேர் பண்ணுங்க.இது கண்டிப்பா ஒரு நல்ல ஆசிரியர்/வழக்கறிஞர்/நீதிபதி/அரசியல்வாதி/காவல்துறை/பொதுமக்கள இது போய் சேரும்.இதனால எங்களுக்கு நல்லது கூட நடக்கலாம் அவங்க ஏமாறுவதை கூட தடுக்கலாம்..ப்ளீஸ் உங்களோட ஒரு ஷேர் எங்களுக்கு உதவலாம் ப்ளீஸ். 🙏தயவு செய்து எல்லாரும் மெயின் subject படிங்க.Ex: B.Com, B.Sc(Botany,Zoology,Chemistry,Physics,Computer Science) படிக்கலாம் ,B.Com(IT),B.Sc(Software System) போல mixed வேண்டவே வேண்டாம்.

    இத படிக்குற ஆசிரிய/பேராசிரிய பெருமக்களே மாணவர்கள மூளைசலவை செய்யாதீங்க.தகுதியில்லாத படிப்ப மாணவர்கள மீது துணிக்காதீங்க.நீங்க வாழ பிறரை கெடிக்காதீங்க “ படித்தவன் பாவம் செய்தல் ஐயோ ஐயோ என்று போவான் “ மனசுல வைங்க, B.Sc(Software/CT/SS/CS and IT)படின்னு படிக்குற மாணவன் வாழ்க்கைய கெடுக்காதீங்க.சேர்க்குறதுக்கு முன்னாடி உண்மைய சொல்லி கல்லூரில சேருங்க .இத படிக்குற மாணவ மாணவியரே நல்ல வழிகாட்டிகிட்ட ஆலோசனை கேளுங்க.நாங்க கூட பேராசிரியர்களால் ஏமாற்ற பட்ட ஏமாளி ஆசிரியர்கள்.

    இப்படிக்கு

    Madurai Kamarai University ஆல் ஏமாற்ற பட்ட M.Sc(CS and IT) மாணவ மாணவியர்

    ப்ளீஸ் !!! share பண்ணாம போயிராதீங்க...🙏🙏🙏

    ReplyDelete
  15. மதிப்பிற்குரிய மாணவர்களே /ஆசிரியர்களே /பொதுமக்களே ! இத படிக்காம போகாதீங்க ப்ளீஸ் !!!

  16. Same problem is in MS university.

    ReplyDelete
  17. Yet pass pannavanga enna pannanum ug trb or 2019 yet ah our yet certificate expiry date will close 2020 ......

    ReplyDelete
  18. Tet pass pannavanga enna pannanum ug trb or 2019 yet ah our yet certificate expiry date will close 2020 ......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி