Election 2019 - Presiding Officer's Time Schedule [ 17.04.2019 & 18.04.2019 ] - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2019

Election 2019 - Presiding Officer's Time Schedule [ 17.04.2019 & 18.04.2019 ]


*வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் அலுவலர்களுக்கான முக்கிய குறிப்புகள் மற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவர்களின் தேர்தலின் முந்தைய நாள், வாக்குப் பதிவு நாள் காலை, மற்றும் மாலை செய்யும் பணிகள் பற்றிய Time Schedule.*

*வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் ,பகல் 12.00 மணிக்குள் Presiding and Polling Officials தங்களுக்கு ஒதுக்கீடு செய்த வாக்குச்சாவடி என உறுதி செய்து பணிக்கு செல்ல வேண்டும்.*

*Presiding Officer தங்கள் வாக்குச் சாவடிக்கு உண்டான காவலர் வந்துள்ளார்களா என பார்க்க வேண்டும்.*

*வாக்குச் சாவடிக்கு 100 மீட்டருக்குள் எந்த அரசியல் கட்சியின் விளம்பரங்களோ, 200 மீட்டருக்குள் எந்த பந்தல்களோ இல்லை என்பதை உறுதி  செய்ய வேண்டும்.*

*வாக்குச் சாவடிக்குள் எந்த அரசியல் தலைவர்களின் படமும் இருக்கக் கூடாது என்பதை கண்காணிக்கவும்.*

*வாக்காளர் வெயில் அதிகமாக இருப்பதால் வளாகத்தில் தனியாக உட்காரவும், குடிதண்ணீர் வசதியும் உள்ளதா என உறுதி செய்யவும்.*

*Zonal Officer யிடம் பெறும் தேர்தல் பொருள்கள் Check List படி தங்களது வாக்குச்சாவடிக்கு உரியதுதானா என சரிபார்க்கவும்.*

*2.00 மணிக்குள் Polling Officials யாராவது வரவில்லையெனில் Zonal Officer க்கு தகவல் தர வேண்டும்.*

*4.00 மணிக்குள் Check List படி கிடைக்காத வாக்குச் சாவடி பொருட்களை உடன் கேட்டு பெறவும்.*

*6.00 to 7.00 மணிக்குள் வாக்குச் சாவடிக்குள் PRO, PO1, PO2, PO3, Polling Agents, National Party, State Party & Other Party, Voting Compartment அமைவிடம் மற்றும் Boothக்கு உண்டான IN & OUT Posters எல்லாம் ஒட்டி தயார்நிலையில் வைக்கவும்.*

*இரவு 8.00 to 9.00 மணிக்குள் வாக்குச் சாவடிக்கான 5 வகையான கவர்களில் Polling station number, name of the polling station, Parliament constituency number எல்லாம் எழுதி தயாராக வைக்கவும்.*

*Check Lisit ல் முக்கியமாக கவனிக்க CU ,BU, VVPAT Metalseal  Green Paper Seal, Address Tag, Strip Seal, Arrow mark Rubber stamp, Distinguished mark, Marked copy, Reference copy, Indelible Ink, 17A,17c, PRO diary, PRO Declaration, Tendered ballot paper, முகவர்களின் ஊர்ஜிதம் பண்ண வேண்டிய ஆவணம், சரிபார்க்கவும்.*

*தேர்தலன்று காலை PRO & Polling Officials காலை 4. 00 மணிக்கு எழுந்து தேர்தலுக்கு தயாராக வேண்டும்.*

 *5.30 மணிக்கு Polling Agents Appointment letter பெற்று Agents முன்னிலையில் NOTA உட்பட 50 ஓட்டுகள் (பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்கிறது என்றால் 50 + 50) பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு வேட்பாளருக்கும் எவ்வளவு ஓட்டு பதிவு செய்தனர் என்பதை ஒரு தாளில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். Mock Poll செய்து PRO கையெழுத்து போட்டு Agents Signature பெற்று,  CRC முறைப்படி முடித்து, 50+7 slip black cover, மற்றும்  boxல் வைத்து seal வைத்து  Agents, PRO signature பெறவேண்டும்.*


*வாக்குச் சாவடி தலைமை அலுவலர் PO1யிடம் தான் எதையாவது மறந்தால் அதனை நினைவூட்டும்படி சொல்லி வைக்க வேண்டும்.*

*பின்னர் CU யில் Green Paper Seal, Special Tag, Strip Seal, VVPAT Seal, Address Tag எல்லாவற்றிலும் PRO, all Agents Signature பெற்று Polling Booth station No, constituency Number எழுத வேண்டும்.*

*கண்ட்ரோல் யூனிட்டை சீல் வைக்கும்போது BATTERY SWITCHஐ OFF செய்ய மறக்காதீர்கள்.*

*7.00 மணிக்கு Polling Started என App and மண்டல அலுவலருக்கும் SMS தகவல் தெரிவிக்க வேண்டும்.*

*தேர்தலன்று மாலை 6.00மணிக்கு தேர்தல் முடிவுறுவதால் வரிசையில் நிற்கும் வாக்காளர்களில் கடைசியில் நிற்கும் வாக்காளருக்கு Token எண் 1ல் இருந்து கொடுக்க ஆரம்பித்து ஒவ்வொரு வாக்காளராக வாக்களிக்க அனுமதிக்கவேண்டும்.*

*மிக, மிக முக்கியம்:* *தேர்தல் முடிந்ததும் CLOSE பட்டனை அழுத்த வேண்டும், கண்ட்ரோல் யூனிட் BATTERYயை ஆஃப் செய்ய வேண்டும்.*

 *வாக்குச் சாவடி தலைமை அலுவலர் தேர்தல் தொடர்பான அனைத்து  ஆவணங்களையும்  உரிய உறைகளோடு மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

 *இது அவர் பணி, இது என் பணி என பிரித்து பார்க்காமல் எல்லோரும், எல்லா பணிகளையும் பகிர்ந்து செய்யவும்.

*தேர்தல் பணி சிறப்பாக முடிய நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி