தமிழக பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவ முறை இந்த ஆண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புத்தக எடை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பருவத்துக்கு ஏற்ப பாடங்களை தொகுத்து ஒரே புத்தகமாக வழங்கப்பட்டது. முதல் பருவத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு புத்தகமாகவும், 6, 7, 8 வகுப்புகளுக்கு மொழி பாடங்கள், இதர பாடங்களுக்குஎன தனித்தனியே 2 புத்தகங்கள் வழங்கப்பட்டது. தற்போது 2-ம் பருவத்துக்கு அக்டோபர்முதல் டிசம்பர் வரை புத்தகங்கள் அச்சிடப்பட்டுவழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை செப்டம்பரிலேயே பள்ளிகளுக்கு வினியோகித்துவழங்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.1 முதல் 5-ம் வகுப்பு வரை முதல் பருவத்தில் ஒரு புத்தகமாக வழங்கப்பட்டதை மாற்றி, 2வது பருவத்தில் மொழி பாடத்துக்கு ஒன்றும் கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்துக்கு ஒன்றுமாக 2 புத்தகம் வழங்கப்பட உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி