Tamilnadu Teachers Education University, B.Ed & M.Ed. Examinations - MAY/JUNE 2012 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2012

Tamilnadu Teachers Education University, B.Ed & M.Ed. Examinations - MAY/JUNE 2012

Click here for B.Ed 2012 result

Click here for B.Ed Special 2012 result

Click here for M.Ed 2012 result  

பி.எட்.,- எம்.எட்., தேர்வு முடிவுகள் வெளியீடு!பி.எட்., - எம்.எட்., தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் மாணவ, மாணவிகள் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மறுகூட்டல், மறு மதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பும் தேர்வர்கள், 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயகுமார் வெளியிட்ட அறிவிப்பு:பல்கலையின் இணைப்புப் பெற்ற, 649 கல்வியியல் கல்லூரிகளுக்கான, பி.எட்., - எம்.எட்., தேர்வு முடிவுகள், 11ம் தேதி (இன்று), பல்கலை இணையதளத்தில் ) வெளியிடப்படும்.மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிகத் தேர்ச்சிச் சான்றிதழ், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில், இம்மாத இறுதி வாரத்தில் வழங்கப்படும்.மறுகூட்டல், மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பும் தேர்வர்கள், அதற்குரிய தனித்தனி விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, அதற்குரிய கட்டணங்களை செலுத்தி, 24ம் தேதிக்குள், "தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, சென்னை௫&' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.இதற்கான விண்ணப்பப் படிவங்களை, பல்கலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி