1869 பள்ளிகளில் சுற்றுசூழல் மன்றம்: பராமரிப்புக்காக ரூ. 46.72 லட்சம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2012

1869 பள்ளிகளில் சுற்றுசூழல் மன்றம்: பராமரிப்புக்காக ரூ. 46.72 லட்சம்

தமிழகத்தில் 1869 பள்ளிகளின், சுற்றுச்சூழல் மன்றத்தை பராமரிக்க, தலா 2500 ரூபாய் வீதம், 46 லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க, சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது.தேசிய பசுமைப்படை இல்லாத பள்ளிகளில் மட்டுமே சுற்றுச்சூழல் மன்றம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு, பராமரிப்பிற்காக 1250 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும், கூடுதலாக தலா 140 பள்ளிகளில், சுற்றுச் சூழல் மன்றம் அமைக்கவும், அதன் பராமரிப்பு செலவை 2500 ரூபாயாக உயர்த்தி, சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி, முதற்கட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 59 பள்ளிகளின் பராமரிப்பிற்காக, ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்களிடையே சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு, உலக வெப்பமயமாக்கலை தடுக்க,மரக்கன்று, மூலிகை தோட்டங்களை உருவாக்கவும், இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி