தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் செய்தி குறிப்பு எண். 601 நாள். 10.10.2012 பதிவிறக்கம் செய்ய...
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்காக அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெறவிருந்த சிறப்பு முகாம் அக்டோபர் 28-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் கடந்த 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. பொது மக்களின் வசதிக்காக, அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புமுகாம்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்த நிலையில், மாநிலம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் 14-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அன்று நடைபெறுவதாக இருந்த வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்கான சிறப்பு முகாம் அக்டோபர் 28-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.இந்த ஒரு மாதத்துக்குள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், பெயர் நீக்கம் உள்ளிட்ட பணிகளைச் செய்ய தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி