ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் வரும் 14ம் தேதி நடத்தப்பட உள்ள, டி.இ.டி. மறுதேர்வில், 6.82 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமான மையங்களில் தேர்வுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஜூலையில் நடந்த, டி.இ.டி., தேர்வில், 6.67 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், தோல்வி அடைந்த தேர்வருக்காக, இம்மாதம், 3ம் தேதி, மறுதேர்வு நடக்க இருந்தது; பின், புதிய தேர்வர்களும், தேர்வில் பங்கேற்பதற்கு வசதியாக, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.இதற்காக, கடந்த மாதம், 24ம் தேதிமுதல் 28ம் தேதி வரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதையடுத்து, 6.82 லட்சம் பேர், 14ம் தேதி நடக்கும் தேர்வில் பங்கேற்கின்றனர். 1,000த்திற்கும் மேற்பட்ட மையங்களில், தேர்வுகள் நடக்கின்றன.காலையில், இடைநிலை ஆசிரியருக்கான முதல்தாளும், பிற்பகலில், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. இரு தேர்வுகளும், தலா, 150 மதிப்பெண்களுக்கு நடக்கும். தேர்வுக்கு, 3 மணி நேரம் வழங்கப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. தேர்வை கண்காணிக்க, டி.ஆர்.பி., உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி