தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 26,000 பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நியமனத்துக்கு வகை செய்யும் ஏப்ரல் 30 தேதியிட்ட பணி நியமனஅரசாணை எண் 72 ரத்து செய்யப்பட்டுள்ளது.மதுரை பாப்பையபுரம் முத்து லெட்சுமியின் மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளைநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.மாவட்டம் தோறும் சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள்,சமையலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கன் வாடி உதவியாளர் மற்றும் அமைப்பாளர்கள் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டனர். பணியாளர் நியமனம் அரசியல் சட்டத்தின் 14 , 16 வது பிரிவுகளுக்கு விரோதமானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.3 கி.மீ உள்ளவர்கள் மட்டுமே பணி நியமனத்திற்கு தகுதி உள்ளவர் என்பது தவறு என்றும், வட்டார அடிப்படையில் தகுதி நிர்ணயிப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. 3 கி.மீ வசிப்பிட வரம்பால் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதுசாத்தியமாகாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.பணியாளர் நியமனத்துக்கான புதிய விதிமுறைகளையும் ஐகோர்ட் வெளியிட்டது.புதிய விதிமுறையின் கீழ் இரண்டு மாதத்தில் பணி நியமனம் செய்யவு உத்தரவிட்டுள்ளது.
Oct 2, 2012
Home
COURT
தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 26,000 அங்கன்வாடி, சத்துணவு பணியாளர் நியமனங்கள் ரத்து செய்து - மதுரை ஐகோர்ட்
தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 26,000 அங்கன்வாடி, சத்துணவு பணியாளர் நியமனங்கள் ரத்து செய்து - மதுரை ஐகோர்ட்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி