அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கென தனித்தனி கழிப்பிட வசதி இல்லாத காரணத்தால், பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள், பள்ளிப் படிப்பை தொடருவதற்கு தயக்கம் காட்டுவது, தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.சைல்டு ரைட்ஸ் அண்டு யூ (Child Rights and You) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த சென்னையில் உள்ள 100 குடும்பங்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்களில் 94 சதவிகிதம் பேர், போதிய சுகாதார வசதி இல்லாத காரணத்தினால், தங்களின் பெண் குழந்தைகளை, பள்ளிகளில் இருந்து நிறுத்தி விடுவதாக கூறினர். இதே நிறுவனம், டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு முன்னணி நகரங்களிலும் ஆய்வை நடத்தியது.தமிழகத்தில் செயல்படும் 46% பள்ளிகளில் முறையான கழிப்பிட வசதி இல்லை என்பதும் இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாதது, பெண் ஆசிரியர்கள் பற்றாக்குறை, இளம் வயதிலேயே திருமணம் போன்ற பல்வேறு காரணங்களால், மாணவிகளின் எண்ணிக்கை சரிந்து வருவதாக அந்த ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.இந்த ஆய்வில் சென்னையைச் சேர்ந்த பெற்றோர் பலருக்கு, கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ், மாணவிகளுக்கு முறையான, சுகாதாரமான கழிப்பிட வசதியை பள்ளிகள் செய்து தர வேண்டும் என்ற விதிமுறை தெரிந்திருக்கவில்லை என்பதும்கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 85% பெற்றோருக்கு கட்டாயக் கல்விச் சட்டம் என்ற சட்டம் இருப்பதே தெரியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி