இன்று டி.இ.டி., மறு தேர்வு : 6.16 லட்சம் பேர் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2012

இன்று டி.இ.டி., மறு தேர்வு : 6.16 லட்சம் பேர் பங்கேற்பு


ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்தும் டி.இ.டி., தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 6.16 லட்சம் தேர்வர் பங்கேற்கின்றனர். ஜூலையில் நடந்த டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர், தோல்வி அடைந்தனர். கடந்த மாதம்,
17 ஆயிரம் பேர், புதிதாக விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கான டி.இ.டி., தேர்வு, இன்று, 1,094 மையங்களில் நடக்கின்றன. காலையில், இடைநிலை ஆசிரியருக்கான தேர்வும், பிற்பகலில், பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வும் நடக்கிறது. முதல் தாள் தேர்வை, 2.52 லட்சம் பேரும், இரண்டாம் தாள் தேர்வை, 3.64 லட்சம் பேரும் எழுதுகின்றனர். இரு தாள்களையும் சேர்த்து, 58 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். முந்தைய தேர்வில், தேர்வு எழுத வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே வழங்கப்பட்டது. இன்றைய தேர்வுக்கு, 3 மணி நேரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், முந்தைய தேர்வைப்போல், தேர்வர் தரப்பில் புகார் எழாது எனவும், நிதானமாக தேர்வர் விடை அளிக்க முடியும் எனவும், டி.ஆர்.பி., தெரிவித்தது.
72 சதவீதம் பேர் பெண்கள் : முதல் தாள் தேர்வில், 24.20 சதவீதம் பேர் ஆண்கள்; 75.80 சதவீதம் பேர் பெண்கள். இரண்டாம் தாள் எழுதுவோரில், 30.30 சதவீதம் பேர், ஆண்கள்; 69.70 சதவீதம் பேர் பெண்கள். மொத்தத்தில், ஆண்கள், 27.80 சதவீதம் பேரும், பெண்கள், 72.20 சதவீதம் பேரும், தேர்வெழுதுகின்றன

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி