மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை அறிய இணையதளம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2012

மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை அறிய இணையதளம்

மாற்றுத் திறனாளிகள், தங்களுக்கான உரிமைகள், சட்டங்கள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கு, மாத இதழும், இணையதளமும் வெளிவர இருக்கின்றன. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில்,"ஊனமுற்றோர் உரிமைக்குரல்' மாத இதழ், வெளிவர இருக்கிறது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள உரிமைகள், சட்டங்கள், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கான அரசாணைகள், போன்றவற்றை அறிய முடியும். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு வேண்டிய, பல்வேறு தகவல்கள், படிவங்கள், ஆணைகள் உள்ளிட்டவற்றை பதிவிறக்கம்செய்து கொள்ளும் வகையில், தமிழ் இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. மாத இதழ் வெளியீட்டு விழா, மற்றும் இணையதள துவக்கவிழா,கவர்னர் மாளிகையில் உள்ள, அன்னபூரணா அரங்கில், இன்று காலை நடக்க உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி