மாற்றுத் திறனாளிகளை கையாள்வதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2012

மாற்றுத் திறனாளிகளை கையாள்வதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உள்ளடங்கிய கல்வித் திட்டத்தில் பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகளை கையாள்வது குறித்து அக்.20-ம் தேதி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 2,607 தொடக்க நிலை ஆசிரியர்கள், 1,617 உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுனர்களுக்கு இன்று தேனி அல்லிநகரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இந்தப் பயிற்சி வகுப்பை அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தொடங்கி வைத்துப் பேசினார். உதவித் திட்ட அலுவலர் கரிகால் வளவன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மல்லிகா ஆகியோர் உடனிருந்தனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி