ஆசிரியர் தகுதி தேர்வு என, அழைக்கப்படும் "டி.இ.டி.,' தேர்வில், தேர்ச்சி பெற்ற, 2,448 பேரின், "ரேங்க் பட்டியல்" புதிய விதிமுறைகளின்படி, மாற்றி அமைக்கப்படுகிறது.ஏற்கனவே நடந்த, டி.இ.டி., தேர்வில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். "இவர்களது பணி நியமனம், பணி நியமனத்திற்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்' என, சென்னை ஐகோர்ட் தெரிவித்தது.அதன்படி, புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி, தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, புதிய, ரேங்க் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனால், தேர்வு பெற்றவரின், ரேங்க் இடம்மாறலாம்; ஆனால், வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.புதிய தேர்வுப் பட்டியல், ஓரிரு நாளில் வெளியிடப்படும்.புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும், இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மட்டும், சுப்ரீம் கோர்ட்டில் இறுதி தீர்ப்பு வரும் வரை, மாநில பதிவுமூப்பு அடிப்படையிலேயே (டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்) நடக்கும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Oct 10, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி