ஆசிரியர் தகுதத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதி மறுதேர்வு கடந்த மாதம் 14-ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இம்மாதம் 2-ம் தேதி வெளியிடப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் தேர்வில்425 பேர், இடைநிலை ஆசிரியர் தேர்வில் 394 பேர் என மாவட்டத்தில் மொத்தம் 819 பேர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி கடந்த 6-ம் தேதி முதல் பாளையங்கோட்டை தூயசவேரியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாள்களும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இந்நிலையில், வியாழக்கிழமை இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இப்பணி வெள்ளிக்கிழமையும் தொடர்ந்துநடைபெறுகிறது. இந்த நான்கு நாள்களும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணியில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சான்றிதழ் சரிபார்ப்பு மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த 4 நாள்களும் கலந்துகொள்ள முடியாதவர்கள் 10-ம் தேதி கலந்துகொள்ளலாம் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப. கிரேஸ் சுலோச்சனா ரத்தினாவதி தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி