▼"ரேஷன் அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி ஜனவரி 1-ல் தொடக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2012

▼"ரேஷன் அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி ஜனவரி 1-ல் தொடக்கம்.

ரேஷன் அட்டைகளை புதுப்பிக்கும் வகையில், அவற்றில் உள்தாள்களைஒட்டும் பணி ஜனவரி 1-ம் தேதி தொடங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை சிறப்பு ஆய்வுக் கூட்டத்தை அமைச்சர் நடத்தினார்.இந்தக் கூட்டத்தில் அவர் கூறியது: தமிழகத்தில் விலையில்லாத அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ், 1.84 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 33 ஆயிரத்து 474 ரேஷன் கடைகள் மூலம்அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்துக்கான ஒதுக்கீட்டின்படி அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் வரும் 5-ம் தேதிக்குள் நகர்வு செய்யப்பட்டு இருப்பு வைக்க வேண்டும்.அட்டைதாரர்களுக்குத் தேவையான துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை ஆகியவற்றை மானிய விலையில் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 21 ஆயிரத்து 700 மெட்ரிக் டன் பாமாயில் சென்னை துறைமுகத்துக்கு மூன்று கப்பல்கள் மூலமும், தூத்துக்குடி துறைமுகத்துக்கு ஒரு கப்பல் மூலம் 8 ஆயிரம் மெட்ரிக் டன் பாமாயிலும் கொண்டு வரப்படுகிறது.உள்தாள் ஒட்டும் பணி: இப்போது நடைமுறையிலுள்ள ரேஷன் அட்டைகள்2013-ம் ஆண்டு முழுவதும் செல்லுபடியாகும் வகையில் அவற்றின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஜனவரி 1-ம் தேதி முதல் ரேஷன் அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி நடைபெறவுள்ளது. இதன்படி, குடும்பத் தலைவர் அல்லது 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் ரேஷன் கடைக்குச் சென்று உள்தாளை பெற்றுக் கொள்ள வேண்டும். ரேஷன் கடைகளில் பராமரிக்கப்படும் பதிவேட்டில் கையெழுத்திடுவது கட்டாயமாகும்.கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஏற்பாடு:ரேஷன் அட்டைதாரர்கள் கூட்ட நெரிசல் இன்றி புதுப்பித்தல் பணியை மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சுழற்சி முறையில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரேஷன் அட்டைகளைப் புதுப்பிக்க கடைகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.திங்கள் முதல் வெள்ளி வரை சுழற்சி முறையில் தங்கள் ரேஷன் அட்டைகளைப் புதுப்பிக்க கடைகளுக்கு வர முடியாதவர்கள், அந்த வாரத்தில் சனிக்கிழமை கடைக்கு வந்து அட்டைகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.இந்த ஆய்வுக் கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத் துறை செயலாளர் எம்.பி.நிர்மலா, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் பி.எம்.பஷீர் அஹமது, நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் எம்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்:ரேஷன் கடைகளில் தரமான பொருள்களை விநியோகம் செய்ய மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.இது குறித்து தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், பொது விநியோகத் திட்ட கிடங்குகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தையும் இருப்பு வைத்து, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளரின் ஒதுக்கீட்டின்படி கடைகளுக்கு அனுப்ப வேண்டும்.இதை உறுதி செய்யவும், கடைகளில் அனைத்துப் பொருள்களும் இருப்பு வைத்திருப்பது, பொருள்களின் தரம் குறித்த புகார்கள், கடைகளில் தரமற்ற பொருள்கள் காணப்பட்டால் அவற்றை விநியோகம் செய்யாமல் கிடங்குகளுக்கு அனுப்பி தரமான பொருள்களை பெறுதல் ஆகிய பணிகளைக் கண்காணிக்கும் பொருட்டு, மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி