மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி.,) தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது சி.பி.எஸ்.இ., நிர்வாகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.மத்திய அரசின் ஆர்.டி.இ., சட்டப்படி, நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதன்படி மாநிலங்கள் தனித்தனியாக தேர்வை நடத்துகின்றன . சி.பி.எஸ்.சி.,யும் அதன் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியில் சேர்வதற்கு, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை CTET நடத்துகிறது. முடிவுகள் டிச., 27ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் 1 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 7 லட்சத்து 96 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இத்தேர்வில் வெறும் 4,849 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
குறையும் தேர்ச்சி
2011ல், முதன் முறையாக நடந்த முதல் தேர்வில், 9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து நடத்தப்பட்ட மறுதேர்வில்,தேர்ச்சி விகிதம் 7 சதவீதமாக குறைந்தது. தற்போது இது, வெறும் 1 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழகத்தில் நடந்த முதல் டி.இ.டி., தேர்வில் கூட, தேர்ச்சி சதவீதம் ஒன்றைத் தாண்டவில்லை. ஆசிரியர்களின் தேர்ச்சி விகிதம், தொடர்ந்து குறைந்து வருவது ஆசிரியர்களின் தரத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. இருப்பினும் தகுதித்தேர்வை வைத்து மட்டுமே, ஆசிரியர்களின் தரத்தை நிர்ணயித்து விட முடியாது என ஒரு தரப்பு கூறுவதிலும் நியாயம் இருக்கிறது. ஆனால் இதிலிருந்து ஒரு கருத்து மட்டும் தெளிவாகிறது. ஆசிரியர் பயிற்சி படிப்புகளின் நிலை எந்தளவுக்கு இருக்கிறது என்பதை இது வெளிக்காட்டுகிறது.எனவே பி.எட்., மற்றும் D.T.Ed., படிப்புகளில் மாற்றத்தை கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி