நிகழ்வுகள்
*.1349 - பிரான்சின் ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் கிட்டத்தட்ட 2,000 யூதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
*.1779 - ஹவாயில் ஆதிவாசிகளால் கப்டன் ஜேம்ஸ் குக் கொல்லப்பட்டான்.
*.1804 - ஓட்டோமான் பேரரசுக்கு எதிரான சேர்பியர்களின் முதலாவது எழுச்சி கரஜோட்ஜே என்பவனின் தலைமையில் இடம்பெற்றது.
*.1876 - எலீஷா கிறே மற்றும் அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைபேசிக்காண காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர்.
*.1879 - சிலியின் இராணுவப்படைகள் பொலீவியாவின் அன்டோபகாஸ்டா நகரைக் கைப்பற்றினர்.
*.1900 - இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவில் ஒரேஞ்ச் மாநிலத்தை 20,000 பிரித்தானியப் படைகள் ஆக்கிரமித்தன.
*.1918 - சோவியத் ஒன்றியம் கிரெகோரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய ஜூலியன் நாட்காட்டியின் படி பெப்ரவரி1).
*.1919 - போலந்து-சோவியத் போர் ஆரம்பமானது.
*.1924 - ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.
*.1927 - யூகொஸ்லாவியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 பேர் இறந்தனர்.
*.1929 - சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று "அல் காப்போன்" என்பவனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
*.1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பசிர் பஞ்சாங்க் என்ற இடத்தில் ஜப்பானியர்களின் தாக்குதல் ஆரம்பித்தது.
*.1946 - ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது.
*.1956 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது.
*.1961 - 103வது தனிமம் லோரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
*.1966 - அவுஸ்திரேலியாவில் முன்னர் பாவனையில் இருந்த அவுஸ்திரேலிய பவுண்டிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது.
*.1979 - ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அடொல்ஃப் டப்ஸ் காபூலில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் காவற்துறையினருக்கும் கடத்தல்காரருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் அகப்பட்டு இறந்தார்.
*.1981 - டப்ளினில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ர தீயில்48 பேர் கொல்லப்பட்டனர்.
*.1987 - யாழ்ப்பாணம், கைதடியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்பொன்னம்மான் உட்பட ஏழு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
*.1987 - தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி நிதர்சனம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
*.1989 - ஜிபிஎஸ் திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது.
*.1989 - யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் அழிவிற்காக இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக வழங்க சம்மதித்தது.
*.1989 - சாத்தானின் கவிதைகள் நூலை எழுதியதற்காக சல்மான்ருஷ்டிக்கு ஈரான் தலைவர் ருஹொல்லா கொமெய்னி மரண தண்டனை விதி்த்தார்.
*.1990 - பெங்களூருவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 92 பேர் கொல்லப்பட்டு 54 பேர் காயங்களுடன் தப்பினர்.
*.1998 - கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.
*.2000 - நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.
*.2005 - லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
*.2005 - பிலிப்பீன்சில் மணிலா நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 7 பேர் கொல்லப்பட்டு 151 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
*.1483 - ஸாகிருதீன் பாபர், முகலாயப் பேரரசர் (இ. 1530)*.1869 - சார்ல்ஸ் வில்சன், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர், (இ. 1959)
*.1917 - ஹேர்பேர்ட் ஹோப்ட்மன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கணிதவியலாளர்
இறப்புகள்
*.1779 - ஜேம்ஸ் குக், பிரித்தானிய கப்பற் தளபதி, நாடுகாண்பயணி (பி. 1728)
சிறப்பு நாள்
*.காதலர் தினம
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி