டான்செட் நுழைவுத் தேர்விற்கான ஹால் டிக்கெட் தமிழகம் முழுவதும் கடந்த 16ம் தேதி வரை 34 ஆயிரத்து 376 மாணவர்கள் பெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் நேற்று மாலை வரை 5,700 மாணவர்கள் பெற்றுள்ளனர்.அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல்,தொழில்நுட்ப கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ.,எம்.இ.,மற்றும் எம் டெக் பாடப்பிரிவுகளில், அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கு டான்செட் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது.இதற்கான நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் 6ம் தேதி முதல் வருகின்ற26ம் தேதி வரை வினியோகிக்கப்படுகிறது. கோவை மண்டலத்தின் மையமாக தடாகம் ரோட்டில் உள்ள ஜி.சி.டி., கல்லூரியில் மாணவர்கள் ஆன் - லைன் முறையில் பதிவு செய்துள்ளனர்.இதுகுறித்து கல்லூரி முதல்வர் லட்சுமி பிரபா கூறுகையில், "கடந்த16ம் தேதி வரை எம்.பி.ஏ பிரிவில் 13 ஆயிரத்து 362 மாணவர்களும், எம்.சி.ஏ பிரிவில் 5 ஆயிரத்து 555 மாணவர்களும், எம்.இ பிரிவிற்கு 17 ஆயிரத்து 200 மாணவர்களும் தமிழகம் முழுவதும் பதிவு செய்துள்ளனர்.இத்தேர்வுகள் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் நடக்க உள்ளது. மேலும் வருகின்ற 26ம் தேதி வரை ஆன்-லைன் முறையில் மாணவர்கள் ஹால்டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம், என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி