தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-2 தேர்வை ஆகஸ்டு 12-ந் தேதி நடத்தியது. நகராட்சி ஆணையர் சார்பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், முது நிலை ஆய்வாளர், கண்காணிப்பாளர், இளநிலை கண்காணிப்பாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவியில் காலியாக இருந்த 3,687 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடந்தது. தேர்வின் போது வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் குரூப்-2 தேர்வு முடிவு வெளியிடப்படாமலேயே ரத்து செய்யப்பட்டது.இந்த நிலையில் நவம்பர் 4-ந் தேதி மறுதேர்வு நடந்தது. தேர்வு எழுத மொத்தம் 6,49,209 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த தேர்வை 3,74,338 பேர் மட்டுமே எழுதினர். தேர்வு முடிவுநேற்று வெளியிடப்படும் என்று ஆவலோடு பலர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் முடிவு வெளியாகவில்லை. இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி ஒருவர் கூறுகையில், குரூப்-1 தேர்வுக்கான கவுன்சிலிங் தற்போதுநடைபெற்று வருவதால் குரூப்-2 தேர்வு முடிவை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அடுத்த வாரம் குரூப்-2 தேர்வு முடிவை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி