முந்தைய அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தொகுப்பூதிய அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட, 55 ஆயிரம் ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை, பணி வரன்முறைப்படுத்த, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள்எதிர்பார்க்கின்றனர். கடந்த 2004-06 வரைஇடைநிலை ஆசிரியர் 10 ஆயிரம் பேர், முதுகலை ஆசிரியர் 10 ஆயிரம் பேர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் 35 ஆயிரம் பேர் என 55 ஆயிரம் பேர் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். மாதம் 3,000 ரூபாய் முதல் 4,500 ரூபாய் வரை சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த இவர்கள் பின்னர் பணிவரன்முறை செய்யப்பட்டனர்.எனினும், 2004-06 வரையான, 2 ஆண்டுகள், பணி வரன்முறைக்குள் வரவில்லை. பணிவரன்முறை செய்த அரசே தொகுப்பூதிய காலத்தையும், பணிவரன்முறைப்படுத்தி உத்தரவிட வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பணி நியமனம் செய்த அரசே இப்போதும் இருப்பதால் தொகுப்பூதிய காலத்தை, பணிவரன் செய்ய முதல்வர் முன்வர வேண்டும் என 55 ஆயிரம் ஆசிரியர்களும் எதிர்பார்க்கின்றனர்.தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் கூறுகையில்""இரண்டு ஆண்டுகளை பணிவரன்முறை செய்யாவிட்டால் பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன் தேர்வுநிலை, சிறப்புநிலை அடைய கூடுதலாக இரு ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.''என்றார்.
Feb 14, 2013
Home
TR
தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட 55 ஆயிரம் ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை பணி வரன்முறைப்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட 55 ஆயிரம் ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை பணி வரன்முறைப்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி