இ.பி.எப்., முதலீடு : 8.5 சதவீத வட்டி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2013

இ.பி.எப்., முதலீடு : 8.5 சதவீத வட்டி.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட முதலீட்டுக்கு, நடப்புநிதியாண்டில், 8.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் என தெரிகிறது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிற்கு, ஆலோசனை வழங்கும் நிதி மற்றும் முதலீட்டு கமிட்டியின் கூட்டம், இன்று நடந்தது. இதில், தொழிலாளர்வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை, நடப்பாண்டில், 8.5 சதவீதம் உயர்த்துவதற்கான குறிப்பாணை தயாரிக்கப்பட்டு முன் வைக்கப்பட்டது. இதற்கு, கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதில் எடுக்கப்படும் முடிவுக்கு, வரும், 25ம் தேதி கூடும், மத்திய அறக்கட்டளை வாரிய (சி.பி.டி.,) கூட்டத்தில் இறுதி ஒப்புதல் கொடுக்கப்படும் என, தெரிகிறது. தொழிலாளர்கள் சங்க வட்டாரங்களில் கிடைத்த தகவல்படி, நடப்பாண்டில், 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, முந்தைய நிதியாண்டில், 8.25 சதவீத வட்டி வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி