அரசு கலைக் கல்லூரிகளில் 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதில், ஆங்கிலம், கணிதம்,இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் அதிக காலி இடங்கள் இருக்கின்றன.உதவி பேராசிரியர் நியமனம் தமிழ்நாட்டில் 69 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் காலியாக உள்ள 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. உதவி பேராசிரியர் பதவிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டப்படிப்புடன் ஸ்லெட் அல்லது நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. பட்டதாரிகளாக இருந்தால் ஸ்லெட், நெட் தேர்ச்சி அவசியம் இல்லை.அரசு பள்ளி ஆசிரியர்களை போல் போட்டித்தேர்வு ஏதும் இல்லாமல் சிறப்பு மதிப்பெண் வழங்கும் முறை அடிப்படையில் உதவி பேராசிரியர்களை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, பணி அனுபவம், கூடுதல் கல்வித்தகுதி, நேர்முகத்தேர்வு என ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண் வழங்கி மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.பாட வாரியாக காலி இடங்கள்1,063 காலி பணி இடங்களில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களில்தான் அதிக காலி இடங்கள் உள்ளன. பாடவாரியாக முக்கிய பாடங்களில் காலி இடங்கள் விவரம் வருமாறு:–
தமிழ் – 76
ஆங்கிலம் – 140
கணிதம் – 135
இயற்பியல் – 100
வேதியியல் – 95
தாவரவியல் – 60
விலங்கியல் – 55
கம்ப்யூட்டர் சயின்ஸ் – 95
வரலாறு – 77
பொருளாதாரம் – 58
வணிகவியல் – 75
அரசியல் அறிவியல் – 5
நிர்வாகவியல் – 8
புள்ளியியல் – 18
விரைவில் அறிவிப்புமேற்கண்ட பாடப்பிரிவுகள் தவிர, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, எலெக்ட்ரானிக்ஸ் சயின்ஸ், அக்வாகல்சர் என பல்வேறு சிறப்பு பாடங்களில் குறைந்த எண்ணிக்கையிலான காலி இடங்கள் இடம்பெற்றுள்ளன. உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
Feb 13, 2013
Home
LECTURER
அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனம்: பாட வாரியாக காலி இடங்கள் விவரம் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனம்: பாட வாரியாக காலி இடங்கள் விவரம் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி