மறைந்து வரும் கல்விச்சுற்றுலா ஆசிரியர்கள் தயக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2013

மறைந்து வரும் கல்விச்சுற்றுலா ஆசிரியர்கள் தயக்கம்.

மதுரை மாவட்டத்தில், பள்ளி மாணவர்களை கல்வி சுற்றுலாக்களுக்கு அழைத்து செல்லும் ஆர்வம், ஆசிரியர்களிடையே குறைந்துள்ளது.மாணவர்களுக்கு அறிவியல், வரலாறு பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள சிறப்பு மிக்க இடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று,அதன் வரலாறுமற்றும் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் முயற்சியாக, ஆண்டுதோறும் கல்வி சுற்றுலா செல்ல, கல்வித்துறையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.மதுரையைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்களை, பெரும்பாலும் மதுரை, தேக்கடி, குமுளி, கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் போன்ற சுற்றுலாபகுதிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்புவரை, பள்ளி நிர்வாகங்கள் அழைத்துச் சென்றன.இதுபோன்ற சுற்றுலாக்களால்,பாடங்களில் படிப்பவற்றை நேரில் காணும் அனுபவம் ஏற்படுவதுடன், புத்துணர்வும் ஏற்படும்.குறிப்பாக, நடுநிலை பள்ளி மாணவர்கள் அளவில் ஆண்டுதோறும் கல்வி சுற்றுலா செல்லும் வாய்ப்பு இருந்தது. அதிகபட்சம் 3 நாட்கள் திட்டமிட்டு, குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்பட்டது. சில ஆண்டுகளாக இந்த வாய்ப்பை, மாணவர்கள் இழந்துள்ளனர்.மாணவர்களை அழைத்துச் செல்லுவதற்கான பொறுப்பை ஏற்க ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் காலப்போக்கில் கல்வி சுற்றுலா என்பது மறைந்து போகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.அதிகாரி ஒருவர் கூறுகையில்,""அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் தான் முடிவு எடுக்க வேண்டும்.அனுமதிமட்டுமே நாங்கள் கொடுப்போம்.பெற்றோர்கள் தயக்கத்தால் சுற்றுலாவில் மாணவர்கள் பங்கேற்பதில் சிரமம்ஏற்படுகிறது,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி