முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2013

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு, அரசு பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து முன்னுரிமை பட்டியல் கேட்பில், 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மற்றும் கோபி கல்வி மாவட்டங்கள் இயங்கி வருகிறது. அதில், அரசு உயர்நிலை, மேல்நிலை, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில், 2,000க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணி செய்கின்றனர். இவர்களுக்கு, பதவி மூப்பு அடிப்படையில், முதுகலை பட்டதாரிகளாக பதவி உயர்வு காலி பணியிடங்களுக்கு ஏற்ப, ஆண்டுதோறும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நேரடியாகவும் நியமனம் பெறுகின்றனர். பதவிமூப்பு அடிப்படையில், 25 சதவீதமும், ஆசிரியர் தேர்வு வாரியம்மூலம், 75 சதவீதமும் பணி நியமனம் நடந்து வருகிறது.தற்போது, இம்மாவட்டத்தில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி மூப்பு பட்டியல் கேட்டு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பட்டதாரி ஆசிரியர்களாக, பத்து ஆண்டுகள் பணியாற்றியவர்கள் தகுதியின் அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.முதுகலை பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்கள், சி.இ.ஓ., அலுவலகத்தில் பதவி முன்னுரிமை பட்டியல் கருத்துரு வழங்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு, கடந்த வாரம் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது. பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, பொருளாதாரம், கணக்குப்பதிவியல், சமூக அறிவியல் உட்பட பாட வாரியாக அழைக்கப்பட்டுள்ளனர்.பட்டதாரி ஆசிரியர்கள் பதவி மூப்பு முன்னுரிமை பட்டியலை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்சான்றொப்பம் இட்ட கருத்துருக்கள் நான்கு விண்ணப்ப படிவம், பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் பெற்ற நாள், பணி வரன்முறை செய்யப்பட்ட நாள், பணியாற்றும் பள்ளியின் பெயர் மற்றும் பாடம்,முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு இதற்கு முன் அழைக்கப்பட்ட விபரம், ஆசிரியர் பணியில் சிறப்பு தகுதி போன்ற அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய படிவம் மற்றும் அனைத்து விபரங்களையும் சி.டி.,யாக தயாரித்து வழங்க வேண்டும்.இதன்படி, தகுதியான ஆசிரியர்கள் கருத்துரு வழங்கி வருகின்றனர். ஆசிரியர்கள் கொடுத்த விபரங்கள் பள்ளிக்கல்வித்துறை சரி பார்த்து, தகுதியான ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு அழைக்கப்படுவர்.முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு மாநில அளவிலான பதவி மூப்பு அடிப்படையில் தெரிவு செய்யப்படுவதால், அடுத்த கல்வி ஆண்டுக்கு தான் பதவி உயர்வு பொருந்தும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளில் பணி நிரவல் அடிப்படையில் அனைத்து பாடப்பிரிவுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.இதில், ஒரே பாடப்பிரிவில் பல ஆசிரியர்கள் பணியாற்றினால் பிற பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.இதில் ஏற்படும் காலியிடம் ஆசிரியர்தேர்வு வாரியம் நியமனம் மூலம் நிரப்பட்டு பின், பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்களுக்கு பணியிடம் வழங்கப்படும். இதற்கான கவுன்சிலிங் சென்னையில் நடக்க உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி