முதுகலை தாவரவியல் ஆசிரியர் மற்றும் தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேர்வு முடிவுகளை உடன் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தாவரவியல் பாடத்திற்கான, முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியாவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது. போட்டித் தேர்வு அடிப்படையில் தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் 2,300 பேர், கடந்த டிசம்பரில் பணி நியமன உத்தரவுகளை பெற்றனர். இவர்கள் பணியில் சேர்ந்து இரண்டு மாதம் சம்பளமும் பெற்றுவிட்டனர். ஆனால் இவர்களுடன் தேர்வெழுதிய தாவரவியல் பாட தேர்வர்களுக்கு, இதுவரை இறுதிப்பட்டியல் வெளியிடப்படவில்லை. தவறுதலான கேள்விகள் விவகாரம் தொடர்பாக, சென்னை, ஐகோர்ட் உத்தரவின்படி, விடைத்தாள்களை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்து , இறுதிப் பட்டியல் தயாரிக்கும் பணியும் முடிந்துள்ள நிலையில், முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தேர்வு எழுதியோர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தாவரவியல் பாடம் மற்றும் தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்களுக்கான முடிவுகளை உடன் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Feb 18, 2013
Home
PG
TRB
முதுகலை தாவரவியல்
ஆசிரியர் மற்றும் தமிழ்
வழி ஒதுக்கீட்டு
இடங்களுக்கான
தேர்வு முடிவுகளை
உடன் வெளியிட
நடவடிக்கை எடுக்க
வேண்டும் என
தேர்வர்கள்
அரசுக்கு கோரிக்கை
முதுகலை தாவரவியல் ஆசிரியர் மற்றும் தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேர்வு முடிவுகளை உடன் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி