பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சம்பளம் காலத் தாமதமாகிறதா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2013

பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சம்பளம் காலத் தாமதமாகிறதா?

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் மாதந்தோறும் சம்பளம் பெறுவதில் சிரமம் நிலவுகிறது. பல ஆண்டுகளாக காலியாக இருந்த கம்ப்யூட்டர், ஓவியம், உடற்கல்வி, இசை உட்பட பணியிடங்களுக்கு,மாதம் ரூ.5000 சம்பளம் அடிப்படையில் 15 ஆயிரம் பேரை பகுதிநேர ஆசிரியர்களாக சிலமாதங்களுக்கு முன் அரசு நியமித்தது. இவர்களுக்கு மாதத்தில் 12 அரை நாட்கள் பணி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதம் முடிவிலும் அவர்களின் வருகை குறித்து, சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், கணக்கெடுத்து அதற்கான வருகை விபரத்தை, மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு (அனைவருக்கும் கல்வி திட்டம்) அனுப்புவர். அங்கு பணிச்சுமையால் வருகை விவரம் சம்பள "லிஸ்ட்'டுக்கு உடனடியாக ஒப்புதல் கிடைக்காததால், சம்பளம் கிடைப்பது தாமதமாகிறது. ஒவ்வொரு மாதமும் 20 ம் தேதிக்கு பின் தான் இந்த ஆசிரியர்களுக்கு கையில் சம்பளம் கிடைக்கிறது. குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யமுடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர். உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் பிரபாகரன் கூறியதாவது: பகுதிநேர பணியாக அரசே நியமித்ததால், பல ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றியவர்கள்கூட, அப்பணியை ராஜினமா செய்துவிட்டு, இந்த வேலைக்கு வந்தனர். பணி நிரந்தரமாகும் நம்பிக்கையில், ரூ.5,000 சம்பளத்திற்கு வேலையில் உள்ளனர். அதைகூட அவர்கள் உரிய நேரத்தில் பெறமுடியவில்லை. கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல், தலைமையாசிரியர்கள் ஒப்புதல் அளித்தாலே சம்பளம் வழங்கும் வகையில் நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும், என்றார

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி