தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர், மாணவர்கள் விகிதம் குறித்து கணக்கெடுக்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும், 6 முதல் பிளஸ் 2 வரை உள்ள அரசு பள்ளிகளில், முதன்மை கல்வி அலுவலரின் ஆலோசனையின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள், உள்ளிட்ட அதிகாரிகளின் கீழ் பல்வேறு குழுக்கள் அமைக்க வேண்டும்.அந்த குழுக்கள், பிப்.,18, 19 தேதிகளில் அரசு பள்ளிகளுக்கு சென்று, அங்கு வகுப்பறை, ஆய்வக வசதி, குடிநீர், விளையாட்டு மைதானம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 35 மாணவர்களுக்குஒரு ஆசிரியர் உள்ளனரா, என நேரடியாக ஆய்வு செய்து கணக்கெடுக்கவேண்டும்.இதன் முழு விவரங்களை அறிக்கையாக தயாரித்து, இம் மாதம் 20ல்சென்னையில் நடைபெற உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில், சமர்பிக்க வேண்டும், என பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி