முதல்வர் விழா செய்தியை தவறாக கொடுத்த செய்தித்துறை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2013

முதல்வர் விழா செய்தியை தவறாக கொடுத்த செய்தித்துறை.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவ, மாணவியருக்கு, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதுகுறித்த செய்தி குறிப்பை, செய்தித்துறை, தவறாக தயாரித்து வழங்கியது.பிளஸ் 2 தேர்வில், முதலிடம் பிடித்த இரண்டு பேருக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடம் பிடித்த, இரண்டு பேருக்கு, 30 ஆயிரம் ரூபாய், மூன்றாம் இடம் பெற்ற, ஒன்பது மாணவர்களுக்கு, தலா, 20 ஆயிரம் ரூபாய் என, 3.4 லட்சம் ரூபாய் பரிசு;பத்தாம் வகுப்பு தேர்வில், முதலிடம் பெற்ற, ஒன்பது பேருக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் வீதம், 2.25 லட்சம் பரிசு மற்றும் சாதித்த மாணவர்களின் உயர்கல்வி செலவை, தமிழக அரசு ஏற்பதற்கான சான்றிதழ்களையும், முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.இந்த தகவல், செய்தித் துறை அளித்த, செய்திக் குறிப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பில், மாநில அளவில், இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் எடுத்த மாணவ, மாணவியருக்கும், முதல்வர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி, பாராட்டினார் என்றும், செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது.ஆனால், பத்தாம் வகுப்பில், இரண்டாம் இடம் பெற்ற, 52 பேர், மூன்றாம் இடம் பெற்ற, 137 பேருக்கு, முதல்வர், பரிசுகளை வழங்கவில்லை. 22 பேருக்கு மட்டுமே, முதல்வர், பரிசு வழங்கினார். 189 பேருக்கு, அமைச்சர் வைகை செல்வன், பரிசும், சான்றிதழ்களையும் வழங்க, டி.பி.ஐ., வளாகத்தில் ஏற்பாடு செய்து, கடைசியில், சர்ச்சையும், சண்டையுமாக, அந்நிகழ்ச்சி நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் விழா ஏற்பாடுகளில், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா தலையிடவில்லை என்றும், இதில், பள்ளி கல்வித்துறை இயக்குனர் தேவராஜன், இணை இயக்குனர் பழனிச்சாமி உள்ளிட்ட சில அதிகாரிகள் தான் ஈடுபட்டனர் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.முதல்வர் கையால் பரிசு பெறும் மாணவர்கள் போக, மீதம் உள்ளவர்களுக்கு, அந்தந்த மாவட்டங்களில், அமைச்சரையோ அல்லது மாவட்ட கலெக்டர்களை வைத்தோ வழங்கியிருக்கலாம். ஆனால், முறையாக திட்டமிடாததால், பெரும் குளறுபடியில் முடிந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி