உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு இன்று முதல் விண்ணப்பம் விநியோகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2013

உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள், திருப்பூர், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் புதன்கிழமை (இன்று) முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன.இதுகுறித்து எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர்ஆர்.ஜெயகோபால் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: கல்லூரி கல்வித் துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்புவதற்கான விண்ணப்பங்கள், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஜூன் 19 முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன.இத்தேதிகளில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிற்பகல் 3மணி வரை மட்டும் பெற்றுக்கொள்ளப்படும். கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிக்க வேண்டும். மஎஇ,இநஐத, ஒதஊ, சஉப, நகஉப தேர்ச்சி அல்லது பி.எச்.டி. பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை சம்பந்தப்பட்டவர்கள் நேரில் பெற்றுச்செல்ல வேண்டும். வழிகாட்டி நெறிமுறைகளின் படி ரூ. 250, ரூ. 500-க்கான செலுத்துச்சீட்டுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி