அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 23.8.2010–க்கு பின்னர், தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2013

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 23.8.2010–க்கு பின்னர், தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு.

தமிழ்நாட்டில் 23.8.2010 முதல் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. எனினும் தகுதித்தேர்வு அமலுக்கு வருவதற்கு முன்பாக நியமன பணிகளை மேற்கொண்டிருந்தால்அத்தகைய ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. தகுதித்தேர்வு 23.8.2010 முதல் நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டாலும் தமிழகத்தில் முதல் தகுதித்தேர்வே கடந்த 2012 ஆண்டுதான் நடத்தப்பட்டது. எத்தனை ஆசிரியர்கள் நியமனம்? ஆசிரியர் தகுதித்தேர்வில் யாருக்கு விதிவிலக்கு? ஏற்கனவே தகுதித்தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டுமா? அல்லது இந்த 5 ஆண்டு காலஅவகாசம் சுயநிதி தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கா? என்பதில் எல்லாம் ஏராளமான குளறுபடிகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில், அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் (சிறுபான்மை பள்ளிகள் உள்பட) 23.8.2010–க்கு பின்னர், தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள்எத்தனை பேர்? என்பது குறித்து உடனடியாக தகவல் அனுப்புமாறு அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டது. இ–மெயில் மூலம் தகவல் மாநில தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேசுவர முருகனின் இந்த உத்தரவை தொடர்ந்து இதுபற்றிய விவர பட்டியலை அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளும் நேற்று மாலை இ–மெயில் மூலமாக அனுப்பினார்கள். இந்த பட்டியலை ஆய்வு செய்து அதில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாமா? அல்லது தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு குறிப்பிட்ட காலஅவகாசம் கொடுக்கலாமா? என்பது குறித்து அரசு இறுதி முடிவு எடுக்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி