சென்னைப் பல்கலைக்கழக முதுநிலைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் புதன்கிழமை மாலை (ஜூலை 3) வெளியிடப்படவுள்ளன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2013

சென்னைப் பல்கலைக்கழக முதுநிலைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் புதன்கிழமை மாலை (ஜூலை 3) வெளியிடப்படவுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம், எம்.எஸ்.டபிள்யூ., எம்.ஏ.(எல்எம்), எம்.பி.ஏ., எம்.ஏ(எச்ஆர்எம்), எம்.சி.ஏ., எம்.எஸ்சி.(ஐ.டி), எம்.எஸ்சி. (சிஎஸ்) எம்.எஸ்சி.(சிஎஸ்டி) பட்ட மேற்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை
www.unom.ac.in,
www.chennaionline.com/results,
www.schools9.com,
www.indiaresults.com,
http://results.southindia.com,
http://results.webdunia.com,
http://kalvimalar.com/results.asp,
www.examresults.net 
ஆகிய இணைய முகவரிகளில் பார்த்துக் கொள்ளலாம்.

குறுஞ்செய்தி (நஙந) மூலம்தேர்வு முடிவு:
தேர்வு முடிவுகளை 56263 என்ற எண்ணுக்குதங்ள்ன்ப்ற் என டைப் செய்து சிறிது இடைவெளி விட்டு மசஞஙடஎ என்று டைப் செய்து மீண்டும் இடைவெளி விட்டு பதிவு எண்ணை டைப்செய்து குறுஞ்செய்தி அனுப்பியும் தெரிந்து கொள்ளலாம்.விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய, சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் பெயரில் செலுத்தத்தக்க வகையில் ரூ.750-க்கு வரைவோலை எடுத்து, வரும் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கடந்த 3 செமஸ்டர்களில் அனைத்து "தியரி' தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று, நான்காவது செமஸ்டரில் ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியுற்றவர்கள் மட்டும் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். முதுநிலை மாணவர்கள் ரூ. 350, தொழில்படிப்பு மாணவர்கள் ரூ.600 கட்டணமாகச் செலுத்தி உடனடித் தேர்வில் பங்கேற்கலாம். இதற்கான வங்கி வரைவோலையை வரும் 10-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். உடனடித் தேர்வு வரும் 27-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, அண்ணா நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் நடைபெறும். தேர்வு நுழைவுச் சீட்டுகளை கல்லூரி இணையதளத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி