பள்ளிகளில் காலாண்டு தேர்வு செப்., 10ம் தேதி துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2013

பள்ளிகளில் காலாண்டு தேர்வு செப்., 10ம் தேதி துவக்கம்.

காலாண்டு தேர்வு, பிளஸ் 2வுக்கு, செப்டம்பர், 10ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு, செப்., 12ம் தேதியும் துவங்குகிறது. தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அனைத்தும் ஒரே சமயத்தில் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, செப்டம்பர்,10ல் தமிழ் முதல்தாளுடன் தேர்வு துவங்குகிறது. செப்டம்பர், 11ம் தேதி
தமிழ் இரண்டாம் தாள், செப்டம்பர், 12ம் தேதி ஆங்கிலம் முதல்தாள், செப்டம்பர், 13ம் தேதி ஆங்கிலம் இரண்டாம்தாள், செப்டம்பர், 14ம் தேதி கணிதம், விலங்கியல், செப்டம்பர், 17ம் தேதி வணிகவியல், புவியியல், ஹோம்சயின்ஸ், செப்டம்பர், 18 தேதி, இயற்பியல், பொருளியல், செப்., 19ம் தேதி, கம்யூட்டர் சயின்ஸ், பயோகெமிஸ்ட்ரி, புள்ளியியல், செப்டம்பர், 20ம் தேதி, வேதியியல், அக்கவுண்டன்ஸி, செப்டம்பர்,21ம் தேதி, உயிரியல், தாவரவியல், பிஸினெஸ் மாத்ஸ் தேர்வு, காலை, 10 மணி முதல் மதியம், 1.15 மணி வரை நடத்தப்படுகிறது.
அடுத்ததாக பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, செப்டம்பர்,12ம்தேதி, தமிழ் முதல்தாள், செப்டம்பர், 13ம் தேதி தமிழ் இரண்டாம்தாள், செப்டம்பர், 14 ம் தேதி ஆங்கிலம் முதல்தாள், செப்டம்பர், 17ம் தேதி ஆங்கிலம் இரண்டாம்தாள், செப்டம்பர், 18 கணிதம், செப்டம்பர், 19ம் தேதி அறிவியல், செப்டம்பர், 20ம் தேதி, சமூக அறிவியல் தேர்வு, காலை, 10 மணிமுதல், மதியம், 12.45 மணி வரை நடக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி