சிவில் சர்விஸ் முதன்மை தேர்வு: டிச.,1ம் தேதி முதல் துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2013

சிவில் சர்விஸ் முதன்மை தேர்வு: டிச.,1ம் தேதி முதல் துவக்கம்.

மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்விஸ் முதன்மைத் தேர்வு (மெயின்), டிசம்பர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.கடந்த மே மாதத்தில் யுபிஎஸ்சி(பிரிமிலினரி தேர்வு) நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இத்தேர்வில் பங்கேற்கலாம். தகுதியுள்ள விண்ணப்பதார்கள் செப்டம்பர் 10ம் தேதிக்குள் http://upscdaf.nic.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.ஆன்லைன் வழியாக விண்ணப்பித்த படிவத்தை, நகல் எடுத்து UnionPublic Service Commission, Dholpur House, Shahjahan Road, New Delhi - 110069 என்ற முகவரிக்கு செப்டம்பர்18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.விண்ணப்பப் படிவத்துடன், கல்வி சான்றிதழ்கள், வயதுக்கான சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளியாக இருப்பின், அவர்களுக்கான சான்றிதழ் ஆகியவற்றின் நகல் இணைத்து அனுப்ப வேண்டும்.www.upsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து அவர்களுக்கான அனுமதிக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு யுபிஎஸ்சி வலைதளத்தை அணுகலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி