வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. 17ம் தேதி நடக்கும், முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியருக்கானது), 2,68,160 பேரும், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியருக்கானது),4,11,634 பேரும் எழுதுகின்றனர்.தேர்வுகளுக்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன.தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணையதளத்தில்,"ஹால் டிக்கெட்' வெளியிடப்படுகிறது.இதற்கிடையே, 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், விண்ணப்பங்களை, சரியாக பூர்த்தி செய்யவில்லை என, தெரிய வந்துள்ளது. 44 பேர், ஆணா, பெண்ணா என்பதையே குறிப்பிடவில்லை. 2,500 பேர், தேர்வு மையத்தை குறிப்பிடவில்லை. விருப்ப பாடம் குறித்த தகவலை, 7,800 பேர் பூர்த்தி செய்யவில்லை என்பதையும், டி.ஆர்.பி., கண்டறிந்துள்ளது. 17 ஆயிரம் பேர், பல்வேறு தவறுகளை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இந்த தவறுகளை சரிசெய்ய, தேர்வு நாளன்று வாய்ப்பு வழங்கப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. தேர்வு நாளன்று வழங்கப்படும் விடைத்தாளில், அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை, சரியாக பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
Aug 1, 2013
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
TET And RRB ASM main exam both exams are same date 18.08.2013, any change for TET Exam sir, plese reply sir
ReplyDeleteNo sir.
ReplyDelete