வாசிப்பு திறன் மேம்படுத்தும் முயற்சி: மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2013

வாசிப்பு திறன் மேம்படுத்தும் முயற்சி: மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

நூலகங்களில் மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் வாசிப்பு திறன் மேம்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.உலக புத்தக தினத்தை முன்னிட்டு புரவலர்கள் சேர்த்தல், பள்ளி மாணவர்களிடையே வா­சிப்பு திறனை மேம்படுத்துதல், வாசகர் எண்ணிக்கை அதிகரித்து போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்­ சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதனைத் தொடர்­ந்து, தற்போது பந்தலூர் நூலகம் சார்பில்,"பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 200 மாணவர்கள், தேவாலா ஜி.டி.­ஆர். பள்ளியை சேர்ந்த 150 மாணவர்கள், புனித சேவியர் ஆரம்ப பள்ளியை சேர்ந்த 100 மாணவர்கள்" என, முதல்கட்டமாக மொத்தம் 450 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.மேலும், இந்த மாணவர்களை வாரம் ஒருநாள் நூலகத்திற்கு வரவழைத்தும், பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்துசென்றும் வாசிப்பு திறனை மேம்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், நூலகர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி