அகஇ கணக்கு தலைப்பின் கீழ் சம்பளம் பெரும் ஆசிரியர்களுக்கு ஓர் நற்செய்தி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்கச் சொல்லிக் கருவூலத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையை" இரத்து செய்ததோடு முடக்கி வைக்கப்பட்ட நிலுவைச் சம்பளங்களையும் இன்றே வழங்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2013

அகஇ கணக்கு தலைப்பின் கீழ் சம்பளம் பெரும் ஆசிரியர்களுக்கு ஓர் நற்செய்தி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்கச் சொல்லிக் கருவூலத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையை" இரத்து செய்ததோடு முடக்கி வைக்கப்பட்ட நிலுவைச் சம்பளங்களையும் இன்றே வழங்க உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொறுப்பாளர்களும் ஈரோடு மாவட்டப் பொறுப்பாளர்களும் கொடுமுடி வட்டாரப் பொறுப்பாளர்களும் தொடர்ச்சியாக மாவட்டக் கருவூல அலுவலர், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலர், இயக்குநர், கருவூல ஆணையர் ஆகியோரை அணுகியும் முறையிட்டும் "பிச்சை எடுக்கும் போராட்டத்தை" அறிவித்தும், தொடர்முயற்சிகள் செய்தும் "பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பாணை வெளியிடப்படாத காரணத்தால் இம்மாதம் (ஆகஸ்ட் 2013) முதல்தமிழகம் முழுவதும் SSA கணக்குத் தலைப்பின் கீழ் (AD-101) ஊதியம் பெறும் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்கச் சொல்லிக் கருவூலத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையை" இரத்து செய்ததோடு முடக்கி வைக்கப்பட்ட நிலுவைச் சம்பளங்களையும் இன்றே (29.8.13) வழங்கவும் இனிமேல் எந்த ஒரு அரசாணையையும் எதிர்பாராமல் ஆசிரியர்களின் ஜீவாதாரமான, ஊதியப் பட்டியல்களுக்கு மறுப்புரையின்றி கடவாணை வழங்கவும் கருவூலத்துறை ஆணையாளர் அவர்களால் சார்நிலைக் கருவூலங்களுக்கு உத்தரவு பெறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி