அங்கீகாரம் இல்லாத பள்ளிகள்: அரசு நடவடிக்கை தாமதம் ஏன்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2013

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள்: அரசு நடவடிக்கை தாமதம் ஏன்?

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் விவகாரத்தில், தமிழக அரசு,விரைந்து முடிவு எடுக்க வேண்டும்" என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது.மாநிலத்தில், 2,000த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், அங்கீகாரம் இன்றி இயங்கி வருகின்றன. இந்த பிரச்னையில், தமிழக அரசு நிர்ணயித்த நிபுணர் குழு, மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து, அரசிடம், அறிக்கையை சமர்ப்பித்து விட்டதாக கூறப்படுகிறது. எனினும், அரசுத் தரப்பில், எவ்வித நடவடிக்கையும்எடுக்கவில்லை.இந்நிலையில், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள்சங்கத்தின், பொதுக்குழு கூட்டம், பொதுச் செயலர் நந்தகுமார் தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது.இதில், "அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு, உடனே, அங்கீகாரம் வழங்க வேண்டும். பொறியியல் கல்லூரிகளைப் போல், அனைத்து வகை பள்ளிகளுக்கும், ஒரே வகையான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, அங்கீகாரத்தை புதுப்பிக்கும் முறையை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை என, மாற்ற வேண்டும்" என்பது உட்பட, 10 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி