அனைத்து அரசு / அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவேடு ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2013

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவேடு ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவு.

அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் தினசரி வருகை பதிவுகளை, ஆன்-லைன் மூலம், பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், நிர்வாக செயல்பாடு அனைத்தும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. அரசு உத்தரவு, விவரம் கேட்பு, சேமிக்கும் தகவல், விண்ணப்பித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும், தற்போது, ஆன்-லைன்மூலமாகவே பரிமாறப்படுகின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டில், ஒவ்வொரு பள்ளியிலும், படிக்கும் மாணவ, மாணவியர், அங்குள்ள கட்டட மற்றும் இட வசதி, உள்கட்டமைப்பு வசதி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும், ஆன்-லைன் மூலம் பதிவு செய்யும் பணி நடந்தது. இதன் அடுத்த கட்டமாக, தற்போது, பள்ளி துவங்கிய உடன் எடுக்கப்படும், மாணவர்கள் தினசரி வருகை பதிவுகளை, அன்றன்றே காலை, 10:00 மணிக்குள், ஆன்-லைனில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், தங்களது, தினசரி வருகையை, ஆன்-லைன் மூலம் பதிவு செய்கின்றன. இதன் மூலம், தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தும், பள்ளியின் வருகையை வகுப்பு வாரியாக தெரிந்து கொள்ள முடியும் நிலை உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி