CBSE-ல் புதிய பாடத்திட்டம்:இந்தியாவில் 75 பள்ளிகளில் அறிமுகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2013

CBSE-ல் புதிய பாடத்திட்டம்:இந்தியாவில் 75 பள்ளிகளில் அறிமுகம்.

CBSE எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத் திட்டத்தில் CBSE-I என்ற பகுதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் வித்யாஸ்ரம் பள்ளியில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த புதிய பாடம் ஏற்கனவே உள்ள வரலாற்று பாடத்தை காட்டிலும் சிறப்பு அம்சம் நிறைந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் CBSE- I என்ற பாடம் சர்வதேச தரத்தில் இருக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 75 CBSE பள்ளிகளில் இந்ததிட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதே போன்று KNOWLEDGE TRADITION AND PRACTICES IN INDIA என்ற புதிய பாடமும் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தப் பாடம் முதலில் ஒரு சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுகருத்துகள் கேட்ட பின்பு, அடுத்த வருடம் ப்ளஸ் டூ மாணவர்களுக்குஅறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை CBSE தலைவர் வினித் ஜோஷி வெளியிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி