பிளஸ் 1 படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஞாபகத் திறனை மேம்படுத்த பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2013

பிளஸ் 1 படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஞாபகத் திறனை மேம்படுத்த பயிற்சி.

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்காக, பிளஸ் 1 படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஞாபகத்திறனை மேம்படுத்தும் பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.கோவை ரோட்டரி கிளப் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆகியவை இணைந்து பாரத புத்ரா என்கிற நிகழ்ச்சியின் மூலம்இதற்கான பயிற்சி முகாமை நடத்த உள்ளன.இந்தப் பயிற்சி முகாமில்சேர விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத்
தேர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்.1) நடைபெற உள்ளது.கோவை தடாகம் சாலையில் உள்ள சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு நுழைவுத் தேர்வு நடைபெறும்.இதில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் 9843379872 என்ற எண்ணில் பிரதீப் யுவராஜ் என்பவரிடம் தொடர்புகொண்டு பதிவு செய்யலாம். மேலும் கிருஷ்ணா ஸ்வீட்ஸின் அனைத்துக் கிளைகளிலும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.மேலும் www.srikrishnasweets.net என்ற இணையதளத்திலும் விண்ணப்பப் படிவம் கிடைக்கும்.சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் குமார் பாபு அவர்கள் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க உள்ளார். இதன் மூலம் ஏழை மாணவர்கள் தங்களது ஞாபகத் திறனை வளர்த்துக்கொள்வதோடு எளிய முறையில் கற்பது தொடர்பாகவும் பயிற்சி பெற முடியும். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதோடு, வாழ்க்கையில் சிறந்த நபராக வரவும் இந்தப் பயிற்சி உதவும்.நுழைவுத் தேர்வு நடைபெற உள்ள அதே பள்ளியிலேயே 12 ஞாயிற்றுக்கிழமைகள் இந்தப் பயிற்சி முகாம் நடைபெறும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி